2025 மே 08, வியாழக்கிழமை

நியமனப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2015 மார்ச் 31 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

நாடளாவிய ரீதியிலுள்ள தாதிய நிறைவுகான் மருத்துவ தொழில் வல்லுனர்கள் மற்றும் தொழில் மருத்துவர்கள் சேவையினர்களுக்கு நியமனப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (31) காலை நடைபெற்றது.

இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தன, சுகாதார இராஜங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண சபைகளின் சுகாதார அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X