2025 மே 07, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம், மெரவல கலப்பு பிரதேசத்தில் மிகவும் இரகசியமாக நடத்திச்செல்லப்பட்ட  கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை
நேற்று சனிக்கிழமை மாலை முற்றுகையிட்ட சிலாபம் பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழுவினர், அங்கிருந்து  கசிப்பு, 11 இரும்பு பரல்கள், 28 பிளாஸ்டிக் கான்கள், பெருந்தொகையான கோடாக்கள்; உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாகத்; தெரிவித்தனர்.

இக்கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஆற்றினூடாக படகில்; பயணித்து மேற்படி இடத்தை அடைந்ததாகவும் இதன்போது,  அங்கு கொட்டகையொன்றில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் பொலிஸாரை கண்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X