2025 மே 07, புதன்கிழமை

சேதன பசளை தயாரிப்பு காரணமாக துர்நாற்றம்: பிரதேசவாசிகள் விசனம்

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையினரால் குரணை மேஜர் ராஜ் விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்டு வரும் சேதன பசளை தயாரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள துர்நாற்றம் மற்றும் அதிகரித்துள்ள நுளம்பு தொல்லைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சனிக்கிழமை (6) காலை பிரதேசவாசிகள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

சேதன பசளை தயாரிப்பு நிலையத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவிடம்; வினவியபோது,  

கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, உக்கி போகக்கூடிய கழிவுகள் சேதன பசளை தயாரிப்புக்காக வருவது அதிகரித்துள்ளதாகவும்  இதன் காரணமாக துர்நாற்றம் மற்றும் நுளம்பு அதிகரித்துள்ளதாகவும் துர்நாற்றம் ஏற்படுவதை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X