2025 மே 07, புதன்கிழமை

மகனை துன்புறுத்திய தந்தை கைது

Kogilavani   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனது இரண்டாவது மனைவியின் 9 வயது மகனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் நபரை கல்பிட்டி பொலிஸார் நேற்று கைதுசெய்தனர்.
கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாய் தொழிலின் நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் சிறுவன் நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைக்கட்டிருந்துள்ளார்.
அங்கிருந்து சிறுவனை அழைத்து வந்த மேற்படி நபர், சிறுவனைப் பாடசாலைக்குச் செல்லவிடாது தடுத்துள்ளதுடன் தினமும் பல்வேறு வகையில் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதன் பின்னரே மேற்படி நபரை கைதுசெயதுள்ளடன் பாதிக்கப்பட்ட சிறுவனை கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X