2025 மே 07, புதன்கிழமை

சிறுமி துஸ்பிரயோகம்: மூன்று இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2015 ஜூன் 10 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் 17 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய சிறுமியின் காதலர் உட்பட மேலும் இரு இளைஞர்களை புத்தளம் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

கல்லடி போதிராஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

19,21 மற்றும் 24 வயது நிரம்பிய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி புத்தளம் நகரில் அமைந்துள்ள தனியார் கணினி பயிற்சி நிலையத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சிறுமியின் காதலரான இளைஞன் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புத்தளம், செவ்வந்தீவு பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டத்துக்கு சென்று அங்கு சிறுமியை துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார். 

இதனை அங்கு மறைந்திருந்த மற்றைய இரு இளைஞர்களும் தங்களது அலைபேசியில் பதிவு செய்து, அதனை சிறுமி மற்றும் அவளது காதலனிடம் காட்டி இணையத்தில் பதிவேற்றப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, சிறுமியை மற்றைய இரு இளைஞர்களும் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X