2025 மே 07, புதன்கிழமை

இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் சுயதொழில் ஊக்குவிப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், கல்பிட்டி வீதி முதலைப்பாளி கிராமத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு சுயதொழில் மேற்கொள்வதற்கான பொருட்கள் புதன்கிழமை (10) பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிதி உதவியை புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் முதலைப்பாளி கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு முதலைப்பாளி ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் ஊடாக இலங்கை பைத்துல்மால் நிதியம் வழங்கிவைத்தது. 

முதலைப்பாளி முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் மற்றும் அதன் அலுவலகர்கள், முதலைப்பாளி ஜூம்ஆ பள்ளி நிர்வாகிகள், ஆலிம்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் கலந்துகொண்டனர்.

தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் தேவைகளுக்கேற்ப தையல் இயந்திரம், மீன்பிடி வலை, துவிச்சக்கர வண்டி, சக்கர நாற்காலி, வாயு அடுப்பு, வாயு சிலின்டர், கூரை தகடு மற்றும் வீடு திருத்த வேலைக்கான சீமெந்து பக்கெட்டுகள் போன்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. 

இந்த உதவித் திட்டத்தின் கீழ் 258 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X