2025 மே 07, புதன்கிழமை

ரயிலில் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 15 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் - கொழும்பு வீதியின் மெரவல ரயில் கடவையின் ஊடாக சைக்கிளில் பயணிக்க முயற்சித்த கணவன் மற்றும் மனைவி, ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இரவு 7 மணியளவில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த ரயிலிலேயே இத்தம்பதியினர் மோதி உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் கொட்டமுறிச்சா பிரதேசத்தைச் சேர்ந்த காமினி ஜான்ஸ் (வயது 52) மற்றும் அனுலாவதி (வயது 56) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

உயிரிழந்த தம்பதியினரிடம் இரண்டு சட்டவிரோத கசிப்பு போத்தல்கள் இருந்த நிலையில் பொலிஸாருக்குப் பயந்து, மூடப்பட்டிருந்த ரயில் கடவையின் ஊடாக வேகமாக கடக்க முற்பட்ட போதே இவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

சடலங்கள், சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று திங்கட்கிழமை (15) பிரேத பரிசோதனை இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. 

சிலாபம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X