2025 மே 07, புதன்கிழமை

முட்டை சேகரித்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஜூன் 15 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர

இலங்கையில் மிகவும் அரிய வகை இனத்தைச் சேர்ந்த பறவையாக கருதப்படும் கரு நீலதாழைக்கோழி எனும் பறவையின் முட்டைகளை சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 30,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து புத்தளம் மேலதிக மாவட்ட நீதவான் இன்று திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.

இந்த பறவையானது, மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்க்கப்படுகின்ற உயிரினமாகும். இதன், சுமார் 28 முட்டைகளை சேகரித்து வைத்திருந்த நபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

வனாதவில, மொரபாதாக பகுதியைச் சேர்ந்த அசித குமார (வயது 21) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர், வில்பத்து போன்ற சில காடுகளில் வாழும் இவ்வாறான பறவைகளின் முட்டைகளை சேகரித்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கரு நீலதாழைக்கோழி என்று அழைக்கப்படும் இந்த பறவையானது  புத்தளத்திலிருந்து மன்னார் வரை வாய்க்கால் வழியாக நீந்திவரக்கூடிய தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X