2025 மே 07, புதன்கிழமை

பேச்சுப் போட்டியில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிக்கு முதலிடம்

Thipaan   / 2015 ஜூன் 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஆசிரியர் மத்திய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற இவ்வருட இஸ்லாமிய தினப் போட்டியில் இடை நிலைப் பிரிவுக்கான ஆங்கில பேச்சுப் போட்டியில் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும்  சைனப் சாரா புத்தளம் கல்வி வலயத்தில் முதலிடம் பெற்றார்.

'இஸ்லாம் கூறும் சகவாழ்வு' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியே அவர் முதலாமிடம் பெற்றுள்ளார்.
இவர் சென்ற வருடம் கனிஷ்ட பிரிவில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் புத்தளம் நகர சபையின் முன்னாள்  உறுப்பினரும், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி  ஆசிரியருமான எஸ்.ஆர்.எம். மு{ஹசியின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இவர், வட மேல் மாகாணப் போட்டியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X