2025 மே 07, புதன்கிழமை

கணிதப்பாட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

Thipaan   / 2015 ஜூன் 28 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வடக்கு எல்லைப்புற கிராமமான இலவங்குளம் முஸ்லிம் மஹா வித்தியாலத்தில் கணிதப்பாட ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக  அப்பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர் தர பிரிவுகள் கொண்டு இயங்கும் இப்பாடசாலையில் 226 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

எனினும் மாணவர்களின் தொகைக்கு ஏற்ப கணித பாட ஆசிரியர்கள் இன்மை காரணமாக மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 31 வருடங்களாக நிலவும் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி தாம் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டபோதும்  தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இது காணப்படுவதாகவும் பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X