2025 மே 07, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2015 ஜூன் 28 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தொகுதி  பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு, அரசாங்கத்தினால் அரச அலுவலர்களுக்கு தீர்வையற்ற முறையில் வழங்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் ஒரு தொகுதி   சனிக்கிழமை (27) காலை கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எச். சுமனசேன தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மின்சக்தி ஏரி சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, வடமேல் மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் சரத் குமார, புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சதுங்கஹவத உள்ளிட்ட உதவி பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X