2021 மே 08, சனிக்கிழமை

குருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். 

தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பிரசாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X