2025 மே 23, வெள்ளிக்கிழமை

40 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்க நடவடிக்கை

Super User   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 40 புதிய அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்க மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது கிராமிய வைத்தியசாலைகளில் 38 அம்பியூலன்ஸ் வண்டிகள் கடமையில் உள்ள போதிலும் அவற்றில் அதிகமானவை 15 வருடங்கள் பழமை வாய்ந்தவைகள். இதனால் அவை அடிக்கடி பழுதடைகின்றன.

இதேவேளை நீண்ட காலங்களாக பல கிராமிய வைத்தியசாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகள் இல்லாமையினால் அவசர நோயாளர்களை கொண்டு செல்வதில் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொள்ள நேர்கிறது.

இதனையிட்டு புதிய அம்பியூலன்ஸ் வண்டிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாகாண சுகாதார மற்றும் ஆயுர்வேத அமைச்சர் எச்.பீ. சேமசிங்க தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X