2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை வங்கியின் 2020 புதுவருட கொண்டாட்டங்கள்

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல வாடிக்கையா ளர்களுக்கும் பங்காளர்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துகளைத் தெரிவித்து 2020 புதுவருடத்தில் தனது செயற்பாடுகளை, இலங்கை வங்கி ஆரம்பித்திருந்தது. புத்தாண்டை வரவேற்கும் பிரதான நிகழ்வு, கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தில் சமய வழிபாடுகளுடன் நடைபெற்றது. இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான செனரத் பண்டார இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்தப் பிரதான நிகழ்வுக்கு மேலாக, இலங்கை வங்கியின் சகல கிளைகளிலும் சமய வழிபாட்டு நடவடிக்கைகளுடன் புதுவருட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அரச துறை ஊழியர்களுக்கான உறுதிமொழியை இலங்கை வங்கியின் ஊழியர்கள் ஏற்றிருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் உயர் தரமான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.

இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான செனரத் பண்டாரவினால் “TV BOC Channel 1”/ “TV BOC Channel 2”ஆகிய இரு தொலைக்காட்சி நாளிகைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கை வங்கியின் கிளை வலையமைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த இரு நாளிகைகளும் SLT Peo TV சேவை ஊடாக ஒளிபரப்பப்படும். இந்த சேவையினூடாக வங்கியியல் தொடர்பான பயிற்சிகள், செயற்பாடு அறிவுறுத்தல்கள் மற்றும் தீர்வுகள் மற்றும் சேவைகள் தொடர்பான விளம்பரங்கள் போன்றன கிளை வலையமைப்பில் ஒளிப்பரப்பு செய்யப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .