2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஜனசக்தி அரையாண்டு விருது விழா; சிறந்த சாதனையாளர்களுக்கு கௌரவம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் காப்புறுதித் துறையில் தன்னிகரற்ற விருது விழாவுக்காக சிறப்பாக அறியப்படும் ஜனசக்தி காப்புறுதி, அண்மையில் நடைபெற்ற அதன் வருடாந்த அரையாண்டு விருது விழா 2010இல் 80 சிறந்த விறபனை பிரதிநிதிகளுக்கு நினைவுக் கேடயங்கள், வார இறுதி உபசரணைப் பொதிகள், பணப்பரிசுகள், வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தது.

பிரதம அதிதி நிறுவனத் தலைவர் டப்ளியூ.ரி.எல்லாவல தலைமையில், பணிப்பாளர் ரமேஸ் ரப்டர் மற்றும் உயர் முகாமைத்துவத்தினர் ஆகியோரின் பிரசன்னத்துடன், இந்த வைபவம் மவுன்ட் லெவினியா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

அன்றைய தின வெற்றியாளர்களுள், சிறந்த ஆயுள் விற்பனை பிரதிநிதியாக செல்வி. டி.நதியா, சிறந்த ஒட்டுமொத்த ஆயுள் விற்பனை குழு – கே.பீ.எம்.கே.காரியவசம், சிறந்த ஆயுள் விற்பனை குழு (BPSS) – செல்வி.ஏ.ஏ.பீ.எம்.ஜயவர்தன, சிறந்த ஆயுள் விற்பனை குழு (BPA) – செல்வி. டப்ள்யூ.டி.ஏ.சீ. ரி.விதானகே, சிறந்த ஆயுள் விற்பனை குழு (BPO) – எஸ்.ஜி.சி.சம்பத், சிறந்த ஆயுள் விற்பனை குழு (A-BPM) – ஜே.எஸ்.ஆதிஹட்டி, சிறந்த பொது ADO– செல்வி.ஆர். பீ.எம்.ரி.ஹேரத், சிறந்த பொது BPSS– கே.எம்.ராஜ்மோகன், சிறந்த பொது குழு (BPA) – கே.எச்.கே.சச்சித்த, சிறந்த பொது குழு (BPO) – எச்.எம்.எஸ்.எம்.ஹேரத், சிறந்த பொது குழு (S/BPE) – எம்.கே.டி.புத்திக, சிறந்த பொது குழு (A/BPM) – கே.டபிள்யூ.எஸ்.டி.றொஹான், சிறந்த பொதுப் பிரிவு முகாமையாளர் - எம்.எஸ்.சம்பத் மற்றும் சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் (பொது) –  எம்.பி.விக்கிரமசூரிய ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக கே. டி. புத்திக மற்றும் சி. போகலமுல்ல ஆகியோர் புத்தம்புது மாருதி கார்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. வெற்றியாளர்களை பாராட்டிய ஜனசக்தியின் தலைவர் டபிள்யூ.ரி.எல்லாவல, "தொடர்ந்து 16 ஆண்டுகளில் இலங்கையின் காப்புறுதித் துறையில் ஜனசக்தி காப்புறுதி உறுதியான நிலையை அடைந்துள்ளதாகவும் இக்காலப்பகுதியில் நிறுவனத்தை வளர்த்த மற்றும் நிறுவனத்தோடு வளர்ந்த ஊழியர்களே இந்த சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர்" என்றும் Kஊறினார்.

"ஒரு சிறந்த நிறுவனம் சிறப்பான இலக்குகளை எட்ட உதவிய இவர்கள் ஒரு சிறந்த குழுவாகும். வர்த்தகச் சின்னத்தினதும் நிறுவனத்தினதும் வளர்ச்சிக்காக ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டை பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவம் மிகவும் பெறுமதியாகக் கருதுகின்றது".

இவ்வருடத்தின் இலக்கு, விற்பனை மற்றும் இலாபமட்டத்தில், பெற்றுக் கொள்வதற்காக தங்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்திய அனைத்து உறுப்பினர்களதும் பலம் மற்றும் ஆர்வத்துக்கமைய இவ்வருட இறுதிக்குள் எமது இலக்குகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை தனக்குண்டு" என அவர் தெரிவித்தார்.

"இந்த இலக்குகளை அடைவதற்காக பலதரப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன. புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தவும், புதிய சந்தைப்படுத்தல் முன்னெடுப்புகளை செயற்படுத்தவும், தற்போதுள்ள உற்பத்திகளின் தரத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். ஒரு சிறப்பான நிறுவனம் என்ற வகையில் எமது ஊழியர்களின் செயற்பாடுகளையும் சிறப்புத்தன்மையையும் அறிந்து கொள்ளும் அதேவேளை, அவர்களின் இலக்குகளை அடைய தேவையான சரியான சூழலை உருவாக்கித் தருவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான பொது முகாமையாளர் ரவி லியனகே, ஊழியர்களின் அரையாண்டு சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் வருட இறுதி இலக்குகளுக்கான நோக்கங்களையும் வெளிப்படுத்தினார். அத்துடன், பலதரப்பட்ட புதிய உற்பத்திகள், ஏனைய சந்தைப்படுத்தல் முன்னெடுப்புகள் மற்றும் விற்பனை அணியினரை ஊக்கப்படுத்தும் ஏனைய செயற்பாடுகளுக்கான திட்டம் குறித்தும் அவர் வெளிப்படுத்தினார்.

ஒவ்வொரு வருடமும் புதிய உயரத்துக்கு எல்லைகளை விஸ்தரித்தல் மற்றும் தரத்தை உயர்த்தல் மூலம் ஜனசக்தி நடைமுறைப்படுத்தும், பிரதான திறமைகள், புதிய முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகளை பின்பற்றுவதை திறமையின் மாதிரி உருவாக்கம் அவசியமாக்கின்றது.

இந்த திறமைக்கான தேடல், ஜனசக்தி குறியீட்டின் பலம் மற்றும் நிலையான தன்மையின் கருவான வெளிப்படைத்தன்மை, நம்பிக்கைத்தன்மை, உந்து சக்தி மற்றும் சார்ந்திருக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டுள்ள சாதாரண வியாபார கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட பெறுமதி முறைமையில் இலங்கையின் மிகவும் அறியப்பட்டதும் புத்தாக்கமுமான குறியீடுகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் நிறுவனமாக ஜனசக்தியை உறுதியாக நிலை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .