2021 ஜூலை 29, வியாழக்கிழமை

லஸ்ஸன ஃபுளோரா, ISO 9001:2008 சான்றிதழ் பெற்ற தெற்காசியாவின் முதலாவது மலர் நிறுவனம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லஸ்ஸன புளோரா அண்மையில் கௌரவமிக்க ISO 9001:2008 தரச்சான்றிதழைப் பெற்றுக் கொண்டதுடன், இலங்கையில் மாத்திரமல்லாது, தெற்காசியாவிலேயே இதுபோன்ற கௌரவத்தைப் பெற்ற முதலாவது மலர் நிறுவனமாகவும் திகழ்கின்றது.

1998இல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம், தனது நிபுணத்துவமிக்க முகாமைத்துவம் மற்றும் மிகவும் கவனமாக மேம்படுத்திய முறைமைகள் மூலம் இலங்கையின் மலர் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இவை மிகவும் போட்டித்தன்மைமிக்க விலையில் புத்தாக்கமான மலர்களை வழங்குவதற்கு உதவியது மாத்திரமல்லாது, இலங்கையிலுள்ள நம்பிக்கையான மலர் நிறுவனம் என்ற மதிப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

வைத்தியர் லசந்த மாலவிகே (MBBS, DIPM, PhD) கொழும்பு வைத்திய பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட லஸ்ஸன ஃபுளோரா மலிவு, புத்தாக்கம் மற்றும் சிறப்பான மலர் வடிவமைப்புகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

கோல் ஃபேஸ் ஹோட்டல், நாவல, நீர்கொழும்பு மற்றும் கண்டியிலுள்ள நான்கு பிரதான கிளைகளுடன் இயங்கும் லஸ்ஸன ஃபுளோரா, அதன் ஹோமாகம களஞ்சியசாலையில் அதிநவீன வேலைத் தளத்தையும் குளிரூட்டல் வசதியையும் கொண்டுள்ளது.

'அனுபவமிக்க நிபுணத்துவமிக்கதான எமது ஊழியர்களே எமது பலம். இந்தத் துறையில் எமது 12 வருட அனுபவமானது, திருமண மலரலங்காரம் மற்றும் நிறுவன வைபவங்களுக்கான மலர் அலங்கார தீர்வுகளை வழங்குவதில் எம்மை சந்தையில் முன்னணியில் நிறுத்தியுள்ளது. தொடர்ச்சியாக புத்தாக்கமான வடிவங்களையும் வித்தியாசமான மலர் தீர்வுகளையும் வழங்கி, இலங்கையில் நடைபெறும் முன்னணி சர்வதேச நிகழ்வுகளின் மலரலங்கார தீர்வு வழங்குனராக திகழ்வதில் நாம் பெருமையடைகிறோம்' என முகாமைத்துவப் பணிப்பாளரும் தலைவருமான வைத்தியர் மாலவிகே தெரிவித்தார்.

பௌத்த, கிறிஸ்தவ, ஹிந்து மற்றும் முஸ்லிம் திருமணங்களில் லஸ்ஸன ஃபுளோரா நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், மலர்களை கொண்டு செல்வதற்கு குளிரூட்டிய வாகனங்களை உபயோகிக்கும் இலங்கையின் ஒரேயொரு திருமண மலரலங்கார நிறுவனமாகவும் திகழ்கின்றது.

தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாக மலர்களை முற்பதிவு செய்யும் வசதியையும் லஸ்ஸன ஃபுளோரா தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. அதன் இணையத்தளமான www.lassanaflora.com> பரந்த மலர் தெரிவுகளை வழங்குகின்றது. இதன்மூலம், உலகம் முழுவதிலுமுள்ளவர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு மலர்களை வழங்க உதவுகின்றது. அதன் இணைய திருமண திட்டமிடல் சேவையானது பல வெளிநாட்டினர் மற்றும் இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்தோர் தமது திருமணங்களை இலங்கையில் நடத்த உதவியுள்ளது.

'சிறப்புத்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட முறைமைகளுக்கான எமது அர்ப்பணிப்பானது, இலங்கையிலுள்ள மிகவும் நம்பிக்கையான மலர் நிறுவனம் என்ற கௌரவத்தை பெற்றுத் தந்துள்ளது. நியாயமான வர்த்தகத்தை ஆதரிக்கும் நாம், எமது சகல வழங்குனர்களையும் பங்காளிகளாகவே நோக்குகின்றோம். எமது வழங்குனர்களிடமிருந்து நியாயமான விலைக்கு மலர்களை வாங்குதல், தொழில்நுட்ப உதவி, விதைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அவர்களுக்கு நாம் உதவுகின்றோம். தெற்காசியாவின் மிகவும் நவீனமான திருமணம் மற்றும் மலரலங்கார தீர்வு வழங்குனராக திகழும் எமது நோக்கத்துக்கு இவை பாரிய பங்காற்றியுள்ளன' என வைத்தியர் மாலவிகே மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .