2021 மே 13, வியாழக்கிழமை

UTE அனுசரணையில் 'மெல்பேர்ன் கப் 2011'

Menaka Mookandi   / 2011 நவம்பர் 22 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் கட்டர்பில்லர் உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனமான UTE மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் வகையில் இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கான நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 'மெல்பேர்ன் கப் 2011' நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிகழ்வு சிலோன் கொன்டிநென்டல் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவான இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கான நட்புறவு சங்க அங்கத்தவர்களும், நலன்விரும்பிகளும் பங்குபற்றியிருந்தனர்.

 

 

இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நிதியானது இலங்கையின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனையான மஹரகம புற்றுநோய் மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்தவும், புதிய உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மற்றும் மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் மூலம் அனைத்து விதமான புற்றுநோய்களுக்கும் விசேட பராமரிப்புகள் வழங்கப்படுவதுடன், வருடாந்தம் 10,000க்கும் அதிகமான புதிய நோயாளர்கள் இனங்காணப்படுவதுடன், 30,000க்கும் அதிகமான நோயாளர்களுக்கு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. நாளாந்தம் சுமார் 750 பேர் வரை உள்நோயாளர் பிரிவில் சிகிச்சையும் பெறுகின்றனர்.

UTE நிறுவனம் இந்த அனுசரணைக்கு மேலதிகமாக தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்கு அமைவாக மேலும் பல சமூக அபிவிருத்தி பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறது. இதில் ஓர் அங்கமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் டயலிசிஸ் பிரிவை நிர்மாணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'மெல்பேர்ன் கப் டே' என்பது அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபல்யம் பெற்ற நிகழ்வாகும். ஓவ்வொரு நவம்பர் மாதமும் முற்பகுதியில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் நவம்பர் 9 ஆம் திகதி கொழும்பிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1861ஆம் ஆண்டு முதல் ஆரம்பமான இந்த நிகழ்வு, 160 ஆண்டுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .