Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபொன்டெரா ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளராக செயலாற்றி வரும் வித்தியா சிவராஜா, 2018 பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மலேசியா, சிங்கப்பூரின் சர்வதேச நுகர்வோர் மற்றும் உணவு சேவை செயற்பாடுகளுக்கான முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சர்வதேச பாற்துறை சார்ந்த நிறுவனமொன்றின் தலைமைப்பொறுப்பை இலங்கையர் ஒருவர் ஏற்றுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
ஃபொன்டெரா பிரான்ட்ஸ், ஸ்ரீ லங்கா, இந்திய துணை கண்டம் ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்கள் எமது மாபெரும் சொத்துகளாக அமைந்துள்ளனர். அவர்களுடன் நாமும் வளர்ச்சியடைய எதிர்பார்க்கிறோம். வித்தியா உறுதியான தலைவி. அர்ப்பணிப்பாக செயலாற்றும் இவரின் நியமனம் தெளிவான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. அவரின் திறமையான செயற்பாடுகளினூடாக மலேசியா, சிங்கப்பூர் வியாபாரங்கள் அனுகூலமடையும்” என்றார்.
தமது நியமனம் தொடர்பில் வித்தியா தெரிவிக்கையில், “மலேசியா, சிங்கப்பூர் வியாபாரங்களைத் தலைமை வகிப்பது என்பது விறுவிறுப்பானதாக அமைந்துள்ளதுடன், இந்தச் சவாலையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இரு சந்தைகளையும் சேர்ந்த சிறந்த அணியுடன் செயலாற்ற எதிர்பார்க்கிறேன்” என்றார்.
2004இல் ஃபொன்டெராவுடன் இணைந்து கொண்ட வித்தியா, அங்கர் நியுடேல் வர்த்தக நாமத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தார்.
2007இல் சிங்கப்பூரில் பாற்பண்ணை பிரிவொன்றில் பணியாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. பரந்துபட்ட சந்தைகளில் வெவ்வேறு கலாசார சூழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த அனுபவம் தொடர்பில் வித்தியா தெரிவிக்கையில், “வெவ்வேறு நாடுகளில், பணியாற்றும் முறைகளில் வேறுபாடு காணப்பட்டாலும், பொதுவான செயலாற்றல் அம்சங்கள் வரவேற்கப்படுகின்றன. வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் பணியாற்றும் முறைகள் மாறுபட்ட சூழலில், ஒரே அணியாகச் செயலாற்றுவதற்கு எவ்வாறு ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் என்பதை, எனது பிராந்திய அணி பயிற்றுவித்திருந்தது. கலாசார வேறுபாடுகள் பற்றித் அறிந்து கொள்ள இது உதவியாக அமைந்திருந்ததுடன், நாம் எங்கு வசித்தாலும், நாம் ஒரே பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகிறோம் என்பதை உணர்த்தியிருந்தது” என்றார்.
2010இல் இலங்கைக்கு சந்தைப்படுத்தல் பணிப்பாளராக திரும்பியிருந்த இவர், 2013இல் சர்வதேச ரீதியில் 14 சந்தைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருந்ததுடன், மீண்டும் சந்தைப்படுத்தல் பிரவுக்குத் தலைமை வகிப்பதற்காக திரும்பியிருக்கிறார்.
வித்தியாவின் சர்வதேச தொழில் நிலை மற்றும் தலைமைத்துவ செயற்பாடுகள் போன்றன அவரை முன்மாதிரியான நபராகவும் துறையிலுள்ள ஏனைய பெண்களுக்கு ஆலோசகராகவும் திகழச்செய்துள்ளது. இலங்கை வியாபாரத்தில், அணிகளை ஒன்றிணைப்பதில் அவர் அதிகளவு கவனம் செலுத்துவதும் விசேட அம்சமாகும்.
13 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago