Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபான்ஸ் வியாபாரக் குழுமத்தின் ஓர் உறுப்பினரான அபான்ஸ் பினான்ஸ், 2017 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில், ரூ.197.4 மில்லியனை, வரிக்கு முந்தைய இலாபமாகப் பெற்றுக்கொண்டது. 2016ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட இலாபம், ரூ. 130.5 மில்லியனாகும். அதேபோல், முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், வட்டிக்கு முந்தைய இலாபமாக, 51.29 சதவீதமான வளர்ச்சியை, அபான்ஸ் பினான்ஸ் பெற்றுக்கொண்டது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில், 2016ஆம் ஆண்டின், நிறுவனத்தின் வரிக்குப் பிந்திய இலாபமாக, ரூ. 90.1 மில்லியன், முதல் 2017ஆம் ஆண்டில் 133.6 மில்லியன் ரூபாய் வரை, 48.2 சதவீத வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டது. அபான்ஸ் வியாபாரக் குழுமமானது, நீடித்துழைக்கும் வாடிக்கையாளர் உற்பத்திகள், வீட்டுப் பாவனை மின் உபகரணங்கள், மோட்டார் வாகன விற்பனை, நிதியியல், சுற்றுச்சூழல் அபிவிருத்திச் சேவைகள், பெயர்ச்சியியல், விருந்தோம்பல், நிதியியல் சேவைகள் உள்ளிட்ட பன்முகத் துறைசார் பிரகாசிக்கும் நிறுவனங்கள், பிரிவுகளைக் கொண்ட முழுமையான வணிக வலையமைப்பாகும். வாடிக்கையாளர் உபசரிப்பில், முற்று முழுதாக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும், தொடரும் உறவை தமது வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்பும் நோக்கத்தில், அபான்ஸ் வியாபாரக் குழுமம் பணியாற்றி வருகிறது.
2016/17 கால வரையறையில் பதிவுசெய்யப்பட்ட மூலதனமான, ரூ.382.3 மில்லியன் முதல் ரூ. 844 மில்லியன் வரை மேம்படுத்துவதற்கு, அபான்ஸ் பினான்ஸ் முன்வந்துள்ளது. அதேபோல், ரூ. 1,124 மில்லியன் வரை வளர்ச்சியடைந்துள்ளது. 2018ஆம் தற்போதைய நிதியாண்டில், அயன்வூற் இன்வெஸ்ட்மென்ட் ஹொல்டிங்ஸ் தனியார் நிறுவனம், அபான்ஸ் பினான்ஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்ததோடு, 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், கட்டாயச் சலுகை முடிவடைந்ததும், நிறுவனத்தின் பங்குகள் மூலதனத்தின் 41.89சதவீதத்ைத, அந்த நிறுவனம் தனதாக்கியுள்ளது.
அயன்வூற் நிறுவனத்தின் நீண்டகால மூலதனத் தேவைகளுக்கமைவாக (8 வருட) இலங்கையை இலக்காகக் கொண்ட 30 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துடைய தனியார் நிறுவனமாகும்.
வட்டிவீத அதிகரிப்பு, வாடிக்கையாளர் நுகர்வு மந்தமாகுதல் போன்ற சவால்களின் மத்தியில் நிறுவனம் தனது இலாபத்தைத் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. முழுமையான வட்டி வருமானத்தில் சாதகமாக ஏற்பட்ட வளர்ச்சிைய இலாபம் அதிகரிப்பின் பிரதான காரணியாகக் குறிப்பிடலாம்.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago