2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அமரி விஜேவர்தனவுக்கு கௌரவிப்பு

Gavitha   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமான சின்னத்திரை நாடகங்களை தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் கழகம், அண்மையில் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி அமரி விஜேவர்தன அவர்களுக்கு கௌரவிப்பை வழங்கியிருந்தது.

இலங்கையின் தொலைக்காட்சி நாடகங்கள் துறை என்பது அதன் அசல் தன்மையிலிருந்து சற்று மாறுபட்டு மேலைத்தேய பாணியை தழுவிய வண்ணம் மாற்றமடைந்து வரும் நிலையில், இந்தக் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் கழகத்தின் பணிப்பாளர்களுக்கு தரமான நாடகங்களை உருவாக்க விஜேவர்தன வழங்கியிருந்த பங்களிப்புக்காகவும், இலங்கை சமூகத்தின் பாரம்பரிய கலைப் பெறுமதிகளை வெளிக்கொணரும் வகையில் ஆற்றியிருந்த பங்களிப்புக்காகவும் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

உள்நாட்டு பாரம்பரியங்களை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நாடகமான 'கிந்துரு குமாரயா' இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசையில் தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முழுமையான அனுசரணையை சுவதேஷி இன்டஸ்ரீஸ் (கோம்பா வர்த்தக நாமம்) வழங்கியிருந்தது. உள்நாட்டு கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்க நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த முன்னுதாரணமாக இது அமைந்துள்ளது.

'கிந்துரு குமாரயா' என்பது அடுத்த தலைமுறை தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பயிலும் கட்டமைப்பாகவும் அமைந்துள்ளது. சுதத் ரோஹண என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சி நாடகத்தின் தயாரிப்பு நடவடிக்கைகளில் அடுத்த தலைமுறை நாடக தயாரிப்பாளர்களுக்கும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X