2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அரவிந்த பெரேராவுக்கு விருது

Gavitha   / 2016 ஜூன் 13 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அரவிந்த பெரேராவுக்கு ஆசிய வங்கியாளர்கள் தலைமைத்துவ சாதனையாளர் விருது நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2016 மே மாதம் 10ம் திகதி, துறு மெரியொட் ஹனாய், வியட்நாமில் நடைபெற்ற விருது வழங்கல் நிகழ்வில் 'பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமைத்துவ சாதனையாளர் விருது 2016' வழங்கப்பட்டுள்ளது.

வங்கித் துறையில் நேர்மையான நிர்வாகம், தேசிய மதிப்பு மற்றும் வெற்றிகரமான உத்திகளை நோக்கிய அர்ப்பணிப்புடனான சேவை என்பவற்றுக்காக, சம்பத் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் அரவிந்த பெரேராவுக்கு இவ்விருது வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த விருதானது அரவிந்த பெரேரா தகுந்த உத்திகளைக் கையாண்டு பாரிய சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமான தீர்வுகளை பெற்றமை, பல்வேறுபட்ட வணிக மட்டங்களிலும் சிறப்பான சேவையை வெளிப்படுத்தியமை, அதன் மூலம் வங்கியின் உயர் வளர்ச்சிக்கு பங்களித்தமை போன்றவற்றையும் அங்கிகரிக்கின்றது.

பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமைத்துவ சாதனையாளர் விருது வழங்கல் நிகழ்வானது,மூன்று வருடங்களுக்கு ஒரு முறையே நடத்தப்படுகிறது. கடுமையான மதிப்பீடு செயன்முறைகள் காரணமாக நிதியியல் துறையில் பணியாற்றும் உயர் வங்கியாளர்களுக்கு கிடைக்கும் கடினமானதும்  தனித்துவமானதுமான ஒரு உயர் விருதாக இது கருதப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X