2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆர்பிகோவின் புதிய முயற்சி SEA TO PLATE

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்பிகோ சுப்பர் சென்டர், ‘Sea to Plate’ (‘கடலிலிருந்து உணவுத் தட்டுக்கு’) என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

புதிதாகப் பிடித்த மீன்களை இடைநிலை வியாபாரிகளின் தலையீடின்றி மிகவும் நியாயமான விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.   

தற்போதய வழக்கத்தின்படி, மீனவர்கள் அதிகாலையில் பிடிக்கும் மீன்கள் அன்றைய தினம் முற்பகல் வேளையில் அருகிலுள்ள சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. புதிய திட்டத்தின்படி, ஆர்பிகோ அதற்குச் சொந்தமான ‘ஒரு நாள் படகுகளை’ நீர்கொழும்பு, பேருவளை கடற் பிரதேசங்களில் மீன்பிடியில் ஈடுபடுத்தும். இதன் மூலம் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் அதி விரைவாக வாடிக்கையாளர்களின் கைகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

மொத்த வேலைகளும் ஆர்பிகோவால் நிர்வகிக்கப்படும் என்பதால், வீணான தாமதங்கள் தவிர்க்கப்படுவதுடன், பிடிக்கப்பட்ட மீன்களைக் கடற்கரையில் இருந்து சுப்பர் சென்டருக்குக் கொண்டுவருவதற்கான செலவும் குறையும். ஆகவே, வாடிக்கையாளர்கள் நியாயமான விலைகளில் சத்துள்ள புதிய மீன்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.   

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி குழுமத்தின் தலைவர் கலாநிதி சேன யத்தெஹிகேயின் ஆலோசனைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தனித்துவமான முயற்சி, பாவனையாளர்களின் நலனையும் வசதியையுமே மய்யமாகக் கொண்டதாகும்.

வேகமாக இயங்கும் தற்கால உலகில் மக்களுக்கு தமது அன்றாட அலுவல்களை செய்வதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே, கொடுக்கும் பணத்துக்குச் சிறந்த பெறுமதி தரும் புதிய மீன்களை நேரடியாக ஆர்பிகோ சுப்பர் சென்டரில் வாங்குவதற்கு வழங்கப்படும் இந்த வாய்ப்பை அனைவரும் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X