2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இடர் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வை முன்னெடுத்த ஜனசக்தி

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி பொதுக் காப்புறுதி நிறுவனம் ஹோட்டல் துறையின் இடர் முகாமைத்துவம் தொடர்பில் 'உங்கள் இடர்களை சிறப்பாக சமாளித்தல்' எனும் தலைப்பின் கீழ் அண்மையில் செயலமர்வு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த செயலமர்வின் போது விருந்தோம்பல் துறையின் இடர்கள் தொடர்பான முழுமையான விளக்கங்களை பங்குபற்றுனர்களுக்கு, துறைசார் நிபுணர்கள் மூலம் வழங்கப்பட்டிருந்தன.

'இலங்கை தொடர்ந்தும் சுற்றுலாத்தளமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சுற்றுலா துறையிலுள்ள அபாயங்கள் குறித்து பலரும் சிந்திப்பதில்லை.  எனவே தான் பொறுப்பு வாய்ந்த காப்புறுதி வழங்குனர் எனும் ரீதியில் துறைசார் பிரதிநிதிகளுக்கு இடர்கள் தொடர்பான கல்வியை நாம் வழங்கி வருகிறோம். இதனூடாக எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்கள் தயார் நிலையில் இருக்க முடியும்' என ஜனசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனசக்தி பொதுக் காப்புறுதி லிமிடெட் நிறுவனத்தின் காப்புறுதி பிரிவின் பொது முகாமையாளர்  ஷானி ரணசிங்க, விடுதி உரிமையாளர்கள் தாங்கள் காப்புறுதி கோரல்களை பெறும் போது செய்யும் பொதுவான தவறுகள் குறித்த அறிமுகத்தோடு செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டில்; வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் போதான தமது அனுபவத்தினை சிங்கப்பூர் McLarens Global Claim Service நிறுவனத்தின் பிராந்திய இழப்பு முறைப்படுத்துனர் சைமன் ஸ்டேசி பகிர்ந்து கொண்டார். இருப்பு முதல் இயந்திரங்கள் வரை மற்றும் பொருத்துதல்கள் வரையான பரந்துபட்ட நஷ்டஈட்டு கோரிக்கை மதிப்பிடுதலின் போது இழப்பு கணிப்பீட்டாளரின் பங்கு குறித்த தகவல்களையும் அவர் வழங்கியிருந்தார். இதன் போது காப்புறுதி திட்டமொன்றினை தயார்படுத்துவதற்கான சிறந்த வழிமுறை தொடர்பிலும், சிறந்த நஷ்டஈட்டு கொடுப்பனவு செயல்முறைகளை உறுதி செய்வதற்கு எத்தகைய படிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் பங்குபற்றுனர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்.  

இந்த செயலமர்வில் இலங்கை இயற்கை பேரழிவு முகாமைத்துவ நிலையத்தின் மட்டுப்படுத்தல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் அனோஜா செனவிரத்ன அவர்கள் இயற்கை அனர்த்தங்களுடன் தொடர்புடைய இடர்கள் மற்றும் அபாயங்களை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பில் உரை நிகழ்த்தினார். மேலும் வெள்ளம் அல்லது சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது தனியார் துறை மட்டுமன்றி பொதுத்துறையிலும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் தொடர்பில் விரிவான புள்ளி விபரங்களுடன் அவர் விளக்கினார். விருந்தோம்பல் துறையில் ஈடுபடுபவர்கள் இடர் குறைப்புக்கான மதிப்பிடுவதற்கான விரிவான அவசரக்கால மேலாண்மை திட்டங்களை மேற்கொள்வதன் ஊடாக தங்களது சொந்த இழப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும். 

ஜனசக்தி பொதுக்காப்புறுதி லிமிடெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளர் இந்திரஜி குணதிலக ஜனசக்தியின் ஹோட்டல் ப்ளஸ் திட்டம் குறித்த விபரங்களை பங்குபற்றுனர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஜனசக்தி ஹோட்டல் ப்ளஸ் என்பது ஹோட்டல் உரிமையாளர்களுக்கான விரிவான இடர் முகாமைத்துவ தீர்வு ஆகும். நட்சத்திர வகுப்பு, Boutique ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு 11 தெரிவுகளை உள்ளடக்கிய வசதியான ஒரு பக்கேஜினை ஜனசக்தி ஹோட்டல் ப்ளஸ் வழங்குகிறது.

தீ மற்றும் கலகம், வேலைநிறுத்தம், தீவிரவாதம், தீய குரோதத்தின் காரணமாக ஏற்படும் சேதங்கள், அது தொடர்புடைய இழப்புகள், களவு, பொது பொறுப்பு, பணப் பரிமாற்றல், கண்ணாடிகள் உடைதல், தனிநபர் விபத்துக்கள், நம்பிக்கை உத்தரவாதம், வேலையாள் நஷ்டஈடுகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் கொதிகலன்கள் மற்றும் அழுத்த குழாய் சேதங்கள் போன்ற சகல விதமான இடர்களையும் இக்காப்பீடு உள்ளடக்கியுள்ளது. மேலும் உணவு ஒவ்வாமையால் ஏற்படும் நோய்கள், ஹோட்டலினால் ஒழுங்கு செய்யப்படும் விளையாட்டு அல்லது சுற்றுப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும் விருந்தினர்களுக்கு ஏற்படும் காயங்கள், விருந்தினர் சொத்துக்களை இழத்தல் மற்றும் காப்பீடு செய்யப்பட்ட கட்டிடத் தொகையில் 10% வீதம் வரை மேலதிக மூலதனம் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த பக்கேஜ் விரிவானதுடன், இலங்கையிலுள்ள எந்தவொரு ஹோட்டலும் தத்தமது தேவைகளுக்கேற்ப இக் காப்பீட்டினை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X