Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் நடைபெற்ற லங்கெம் ரொபியலக் 'இயற்கை புகைப்பட போட்டியில்' கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான போட்டியாளர்களுக்கு மத்தியில், தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த துமிது பதனிய உயர் வெற்றியாளராக வெற்றிவாகை சூடினார். இவருக்கு ஒரு சான்றிதழும், ரூபா 20,000 பெறுமதியான ரொபியலக் அன்பளிப்பு வவுச்சரும் பரிசாக வழங்கப்பட்டன.
இஹல-இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவரான களனி திலகரத்ன மேற்படி வெற்றியாளருக்கு மிக நெருக்கமாக இரண்;டாமிடத்திற்கு தெரிவாகியதுடன், அவருக்கு ஒரு சான்றிதழும் ரூபா 15,000 பெறுமதியான ரொபியலக் அன்பளிப்பு வவுச்சரும் வழங்கப்பட்டன. அதேவேளை, மூன்றாமிடத்திற்கு தெரிவான பலாங்கொடையைச் சேர்ந்த நுவான் கமகேவுக்கு ஒரு சான்றிதழும் ரூபா 10,000 பெறுமதியான ரொபியலக் அன்பளிப்பு வவுச்சரும் வழங்கி வைக்கப்பட்டது.
ஹென்ரி ராஜகருண, சந்திரசேன பெரேரா மற்றும் விமல் அமரதுங்க உள்ளடங்கலாக இலங்கை புகைப்படவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தைச் சேர்ந்த சிறப்பான நடுவர்கள் குழு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தது.
'தேசிய புகைப்பட சவால்' (National Photography Challenge) என்றழைக்கப்பட்ட் இப் போட்டியானது இயற்கையின் வர்ணங்களை கொண்டாடியதுடன், நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சேர்ந்த ஆர்வமுள்ள இலங்கையர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களை தம்பக்கம் கவர்ந்திழுத்திருந்தது.
உயர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட துமிது பதனிய இப் போட்டி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 'சூழல் தொடர்பில் அக்கறை செலுத்துகின்ற ஒருவன் என்ற வகையில், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை மேலும் பலப்படுத்த லங்கெம் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகின்றேன். இவ்வாறான போட்டி ஒன்றில் நான் பங்கேற்றது இதுவே முதல் தடவையாகும். ஒரு புகைப்படவியலளாராக எனது பயணத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக லங்கெம் நிறுவனத்திற்கு நான் மிகவும் நன்றி கூறுகின்றேன்' என்றார்.
லங்கெம் சிலோன் பி.எல்.சி. (பெயின்ட்ஸ்) நிறுவனத்தின் பொது முகாமையாளரான தமிந்த சிறிவர்தன கூறுகையில், 'இந்த நாடளாவிய போட்டி தொடர்பாக எமக்கு கிடைக்கப் பெற்ற பிரதிபலிப்புக்கள் மிகவும் ஊக்கமளிப்பனவாக காணப்பட்டன. இந் நாட்டினதும், உலகத்தினதும் பொறுப்புணர்வுள்ள பிரஜை என்ற வகையில், இயற்கை அழகை நாம் ஒவ்வொரு நாளும் ஆராதிக்க வேண்டும் என்பதுடன் இயற்கையை பாதுகாப்பதும் அவசியமாகும். எதிர்கால தலைமுறையினருக்காக சூழலை பேணிக்காப்பதும், பாதுகாப்பதுமே இந்த போட்டி கவனம் செலுத்திய முதன்மையான விடயமாகும். இது எம்முடைய பொறுப்பு. இச் செய்தியை பரப்புவதற்கு எம்மால் முடியுமானதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago