2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் முன்பள்ளி கல்வியை மேம்படுத்த கொமர்ஷல் வங்கி UNICEF உடன் கைகோர்ப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முன்பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக கொமர்ஷல் வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் அரசாங்க பங்குதாரர்களுடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கிணங்க ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் முன் பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கப் பங்காளர்களுக்கு உதவியாக செயற்படும் UNICEF பணிக்கான பங்களிப்பாக, முன்பள்ளியை மேம்படுத்துவதற்கு கொமர்ஷல் வங்கி ஆதரவளிக்கவுள்ளது. பாதுகாப்பான, மிகவும் சமமான, தரமான பாலர் கற்றல் சூழல்களை வழங்குவதற்கான மாகாணத்தின் முயற்சிகளுக்கு இந்த பங்குடைமை ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

இத்திட்டத்தில் முழுப் பாடசாலையையும் புதுப்பித்தலுடன், மேம்படுத்துதல் மற்றும் தரமான தளபாடங்கள் மற்றும் கற்பித்தல்-கற்றல் உபகரணங்களை வழங்குதல் என்பன அடங்குகின்றன.

2022 ஆம் ஆண்டு முதல் UNICEF, அதன் பங்குதாரர்களின் நிதியுதவியுடன், பின்தங்கிய பகுதிகளில் உள்ள 40 முன் பள்ளிகளின் கற்றல் சூழலை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊவா மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

இந்த தனியார்-அரசாங்க பங்குடைமையானது, ஆரம்ப வயதுக் கல்வியை வலுப்படுத்தவும், தரமான முன்பள்ளி கல்வியுடன் மிகவும் பின்தங்கியவர்களை அடைவதன் மூலம் இளம் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு புதிய முன்மாதிரியை பிரதிபலிக்கிறது.

கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. மற்றும் இலங்கையின் முதல் 100% காபன் நடுநிலைமை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கியாகவும் செயற்படுகின்றது. வங்கியின் முழு உரிமையைக் கொண்ட சொந்தமான துணை நிறுவனமான CBC ஃபைனான்ஸ் லிமிடெட் அதன் சொந்த கிளை வலையமைப்பின் மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X