Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் 6000க்கும் அதிகமான ஆரம்ப பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமாக கற்பித்தலை வழங்கும் பிரித்தானியாவின் நிறுவனமான Third Space Global க்கு பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி ஆகியோர் அண்மையில் விஜயம் செய்திருந்தனர்.
இந்த நிறுவனத்தில் பெருமளவு இலங்கையர்கள் பணியாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. தனது சிறுவர்களுக்கான இலவச கற்றல் ஹப்கள் ஊடாக மற்றும் ஆசிரியர்களுக்கான இலவச பயிற்சிப்பட்டறைகள் ஊடாக இலங்கையின் கல்விக்கும் வுhசைன Third Space Global பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்த விஜயத்தை பயன்படுத்தி நிறுவனம் தனது புதிய தன்னேற்புத்திட்டத்தை வெளியிட்டிருந்தது. இதில், 'முன்னொரு போதுமில்லாத வகையில் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்தி, சர்வதேச சமூகத்தில் திறமையானவர்களை உருவாக்கி, அவர்கள் மத்தியில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாசகம் பொறிக்கப்பட்ட சுவட்டை இளவரசர் எட்வர்ட் திறந்து வைத்திருந்தார். இவரும் இந்த சமூகத்தின் ஒரு நபராக அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. Third Space Global இன் வகுப்பறையுடன் முன்பள்ளி மாணவர்களுடன் கணித பாடத்தை இவர் பயின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த இந்த இருவரையும் Third Space Global பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் நிலவீர வரவேற்றிருந்ததுடன், இவருடன் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களும் ஒராயன் சிட்டி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவன் ஞானமும் இணைந்து வரவேற்றிருந்தனர்.
Third Space Global ன் அண்மையில் ஒராயன் சிட்டியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட புதிய அலுவலகத்தை சுற்றி பார்வையிடும் வாய்ப்பு அரச குடும்பத்தைச்சேர்ந்த இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டிருந்தது. இதன் போது ஒன்லைன் கற்பித்தலில் ஈடுபட்டிருந்த 200 க்கும் அதிகமான ஊழியர்களை இவர்கள் பார்வையிட்டனர்.
கல்வியின் முக்கியத்துவம் மற்றும் உலகுடன் இணைக்கப்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி Third Space Global ஊழியர்களுடன் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர். நிலவீர கருத்துத் தெரிவிக்கையில், “தனது எதிர்காலத்துக்காக நாடொன்று மேற்கொள்ளக்கூடிய சிறந்த முதலீடாக கல்வியை குறிப்பிட முடியும். இது இலங்கையை போன்று பிரித்தானியாவுக்கும் பொருந்தும். பிரித்தானியாவின் மாணவர்களுக்கு நாம் வழங்கும் பங்களிப்பு தொடர்பில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். இலங்கையைச்சேர்ந்தவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகளும் இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரச குடும்பத்தைச்சேர்ந்தவர்களை இலங்கைக்கு வரவேற்பதையிட்டும் எமது கல்விக்கான அர்ப்பணிப்பு தொடர்பில் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததையிட்டும் நாம் பெருமை கொள்கிறோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago