2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் சிறந்த பெண்மணி 2025

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன் மேட்ச் நிறுவனத்தின் இயக்குநர் கௌரி ராஜன் – இலங்கை சிறந்த பெண்மணி 2025 என்ற விருதினால் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் மிக மதிப்புமிக்க ஊடக நிறுவனமான ஒளிபரப்புக் கழகம் (SLBC), தனது நூற்றாண்டு விழாவையொட்டி Sun Match நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் கௌரி ராஜனை, இலங்கை சிறந்த பெண்மணி 2025 என்ற பட்டத்துடன் BMICH மையத்தில்கௌரவித்தது. இவ்விழாவின் தலைமை விருந்தினராக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டார்.

இந்த விருது, Sun Match நிறுவனத்தை நாற்பது ஆண்டுகளாக முன்னெடுத்து வந்த அவரது சிறப்பான தலைமைத்துவத்தையும், இலங்கையின் முதல் மகளிர் ரோட்டரி கவர்னராக சமூக நலனுக்காக செய்த பங்களிப்புகளையும் பாராட்டுகிறது.

நிறுவனத் தலைவர்கள், அரசு, கலை மற்றும் சமூகத் துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற வண்ணமிகு விழா BMICH-ல் நடைபெற்றது. இவ்விழா இலங்கையின் 100 சிறந்த பெண்களை கௌரவிக்கும் நிகழ்வாகும்.

கௌரி ராஜனின் கௌரவிப்பு, வணிகம் மற்றும் மனிதநேய துறைகளில் புதுமை,சுறுசுறுப்பு, வளர்ச்சியின் இயக்கம் மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்தில் ஒரு மதிப்புமிக்க தலைவர் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர் என்ற அவரது பிரகாசமான

பயணத்தை வெளிப்படுத்துகிறது. திறமையிற்கான அவர் கொண்ட தளராத அர்ப்பணிப்பு காரணமாக, பெண்களை வலுப்படுத்தவும், திறமைகளை வளர்த்தெடுக்கவும், நிலைத்த சமூக தாக்கத்தை ஏற்படுத்தவும் தொடர்ந்து முன்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

அவரது தொழில்முறை சாதனைகளைத் தாண்டியும், இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான முதல் மகளிர் ரோட்டரி கவர்னராக கவுரி ராஜன், அடுத்த தலைமுறை தலைவர்களை

வழிகாட்டியதற்காகவும், குறைவாக பிரதிநிதித்துவம் பெறும் சமூகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியும் கொண்டாடப்படுகிறார்.

SLBC-யின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்ற இலங்கை சிறந்த பெண்மணி விருதுகள் 2025, நேர்மை, பார்வை, செல்வாக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கும் சிறப்பான பெண்களை கௌரவிக்கிறது. இவ்விருதுகள் நாட்டில் நிலையான நேர்மறைச்சுவடுகளைப் பதிக்கின்றன.

கௌரி ராஜனின் கௌரவிப்பு, அவரது நீடித்த தலைமைத்துவத்திற்கும், எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அவரது பங்கிற்கும் சான்றாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .