Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 02 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் எம்.பீ.டி. குழுமம் (MBD Group) ஆனது 'பெரிதாக்கப்பட்ட நிதர்சன தோற்ற' பிரயோக மென்பொருளான (Augmented Reality app) 'நேத்ரா' (Nytra) இனை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம், இலங்கையில் கல்வி மற்றும் கற்றலுக்கான முன்னோடி 'பெரிதாக்கப்பட்ட நிதர்சனநிலை' சேவை வழங்குனராக திகழ்வதையிட்டு பெருமிதம் அடைகின்றது. கல்வி மற்றும் வகுப்பறை கற்றலுக்கு முற்றுமுழுதாக புதியதொரு பரிமாணத்தை வழங்குவதற்கு தன்னை தயார்நிலைப்படுத்தியுள்ள எம்.பீ.டி. குழுமம் ((MBD Group), 'நேத்ரா' (Nytra) பிரயோக மென்பொருளை அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் போது அறிமுகப்படுத்தியது.
மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு தொழில்நுட்ப துறையான 'பெரிதாக்கப்பட்ட நிதர்சனநிலை' (Augmented Reality) கல்வித் துறையில் உள்வாங்கப்படுவதானது, காகிதங்களில் இருக்கும் தகவலுக்கும் நிதர்சன உலகத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளிக்கு பாலமிடுவதற்கு உதவி புரியும். புத்தகங்களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் விளக்கப்படங்களை – வீடியோக்களாக, டிஜிட்டல் உள்ளடக்கங்களாக, அனிமேசன் உருக்களாக உயிரோட்டமான தன்மைக்கு 'நேத்ரா' (Nytra) மாற்றியமைக்கின்றது. மாணவர்கள் தமக்குரிய கருப்பொருட்கள் மற்றும் பாடங்களை வேடிக்கையான, இலகுவான மற்றும் சுறுசுறுப்பான முறையில் கற்றறிந்து கொள்ள இவ்வசதி இடமளிக்கும்.
பயன்படுத்துனர் ஒருவர், தமது கையிலிருக்கும் iOS அல்லது அன்ட்ரொயிட் சாதனத்தில் மேற்படி பிரயோக மென்பொருளை இலகுவான முறையில் உள்ளிணைப்பு (Install) செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, டிஜிட்டல் தகவல்களின் லேயர்களை திறப்பதற்காக 'நேத்ரா' (Nytra) இலட்சினை பொறிக்கப்பட்ட ஒரு புகைப்படத்திற்கு மேலாக அந்த சாதனத்தை பிடித்திருக்கவும். அதன்மூலம் மிகச் சிறந்ததொரு ஊடக அனுபவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். 'நேத்ரா' (Nytra) பிரயோக மென்பொருளானது, கற்றல் அனுபவத்தை அதிகப்படுத்துவதுடன் பாரம்பரியமான கல்விசார் உள்ளடக்கங்களை மாற்றியமைக்கின்றது.
கட்புல நினைவூட்டற்குறிகள் (Visual cues) ஊடான கற்றல் என்பது, சாதாரணமாக வாசிப்பதை விடவும் மிகச் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குரல் இழையோடிய சிறப்பம்சங்கள் முழுமையான ஒரு ஒலி-கட்புல விளக்கப்பட அனுபவத்தை அளிப்பதுடன், இப் பயன்படுத்துனர்கள் இடைத்தொடர்புபட்ட மற்றும் மனமகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும் இது வசதியளிக்கின்றது. ஸ்மார்ட்போன் கையடக்க தொலைபேசிகள் மூலம் மிக இலகுவாக அணுகிப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் 'நேத்ரா' (Nytra) பிரயோக மென்பொருளானது, எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தவாறும் கற்கும் உலகிற்குள் செல்வதற்கான கதவுகளை திறந்து விடுகின்றது.
'கல்வித் துறையில், 'பெரிதாக்கப்பட்ட நிதர்சனநிலை' (AR) முறைமை என்பது, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு வளம்மிக்க, வெகுமதியளிக்கும் அனுபவமாக இருந்து வருகின்றது. அதேபோல், கற்றல் நடவடிக்கைக்கு முற்றுமுழுதாகவே புதியதொரு பரிமாணத்தை கொண்டு வந்திருக்கின்றது. பூரணத்துவமான கல்வி என்பது, வாசித்தல் மற்றும் கேட்டல் என்பதையும் தாண்டிச் செல்கின்றது. அந்தவகையில், இத் தொழில்நுட்பமானது அதனது பயன்படுத்துனர்கள் ஒரு பாடத்தில் இடைத்தொடர்பாக மற்றும் மூழ்கி கற்பதற்கு இடமளிக்கின்ற அதேவேளை கற்பனை ரீதியான சிந்தனை தூண்டுதலையும் அளிக்கின்றது. 'பெரிதாக்கப்பட்ட நிதர்சனநிலை' (AR) வசதியானது, வகுப்பறையில் மனமகிழ்ச்சியான மற்றும் முடிவற்ற வாய்ப்புக்களை வழங்குகின்றது. வேடிக்கையான, நேரடியான மற்றும் உற்சாகமளிக்கும் கற்றல் அனுபவங்களுக்கு 'நேத்ரா' (Nytra) பிரயோக மென்பொருள் இடமளிக்கின்றது' என்று கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இப் பிரயோக மென்பொருளின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எம்.பீ.டீ. குழும (MBD Group) பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான திரு. அடுல் பஹ்ல் தெரிவித்தார்.
எம்.பீ.டீ. குழும (MBD Group) சிரேஷ்ட பணிப்பாளரான திருமதி. மோனிகா மல்ஹோத்ரா கந்தாரி கூறுகையில், 'இலங்கை இப்போது கல்வித் துறையிலான டிஜிட்டல் புரட்சியில் ஒரு அங்கமாகியிருக்கின்றது. 'பெரிதாக்கப்பட்ட நிதர்சனநிலை' தொழில்நுட்பமான 'நேத்ரா' (NYTRA) இனை முதன்முதலாக இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நாமே முன்னின்று உழைத்தவர்கள் என்பதும், இந்த முக்கிய மாற்றத்தில் ஒரு அங்கமாக திகழ்வதும் எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. 'பெரிதாக்கப்பட்ட நிதர்சனநிலை' வசதி, உலகெங்கும் கல்வியை மீள் வரையறை செய்வதுடன் கற்றலுக்கு உகந்த சூழ்நிலையையும் தோற்றுவிக்கின்றது. இந்த தொழில்நுட்பத்தின் அனுகூலங்களில் ஒருபகுதியை 'நேத்ரா' (Nytra) இலங்கை பயன்படுத்துனர்களுக்கு கொண்டு வரும் என்று நாம் நம்புகின்றோம்' என்றார்.
இந்தியாவின் முன்னணி கல்விசார் கம்பனிகளுள் ஒன்றாக எம்.பீ.டீ. குழுமம் (MBD Group) காணப்படுவதுடன், இத்துறையில் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கல்வித் துறையில் முன்னோடி டிஜிட்டல் புத்தாக்கத்தை முதன்முதலாக வெளியிட்ட குழுமமாகவும் திகழ்கின்றது.
கடந்த பல வருடங்களாக இக்குழுமம் தனது செயற்பாடுகளை இ-கற்றல், எம்-கற்றல், திறன் அபிவிருத்தி, கொள்திறனை கட்டியெழுப்பல், சூழல் நட்புறவுமிக்க குறிப்பேடுகள், காகிதாதிகள், காகித உற்பத்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், பிரம்மாண்ட கடைத்தொகுதி (mall) அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் பல்வகைமைப்படுத்தி உள்ளது. 3 கண்டங்களைச் சேர்ந்த 30 நாடுகளில் குழுமம் தனது வர்த்தக ரீதியான பிரசன்னத்தை நிலைநிறுத்தியுள்ளது.
எம்.பீ.டீ. குழுமத்தின் (MBD Group), தரம் 06 தொடக்கம் 12 வரையான மாணவர்களுக்குரிய 'நேத்ரா' (Nytra) வசதி கொண்ட பரந்துபட்ட வகைகளிலான பாடசாலைப் பாடப் புத்தகங்கள், சமுத்ரா புத்தக நிலையத்தின் ஊடாக இலங்கையில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இப் புத்தக நிலையத்திற்கு கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. 'நேத்ரா' (Nytra) பிரயோக மென்பொருளானது கட்டணம் எதுவுமின்றி இலவசமாகக் கிடைக்கக் கூடியது என்பதுடன், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
25 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago