2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு பெருமை சேர்த்திடும் SLIIT மாணவர்கள்

Gavitha   / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIIT மாணவரான, கனிந்து நாணயக்கார, இலங்கைக்கு பெருமையைச் சேர்த்திடும் வகையில் 'Verizon 2015 சக்தி வாய்ந்த விடைகள் விருதுகள்' போட்டியில் தனது  'iHelmet' ஆக்கத்துக்காக 500,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பரிசை வென்றிருந்தார். 1,400 தொழில் முயற்சியாளர்களுடன் போட்டியிருந்த கனிந்து, இரண்டாமிடத்தை தனதாக்கியிருந்தார்.

கனிந்துவின் iHelmet க்கான வெற்றிப் பயணம் என்பது,  SLIIT இன் இறுதி ஆண்டில் பயிலும் போதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. ஆரம்பத்தில் இராணுவப் போராட்டங்களின் போது மறைவியக்க மேம்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டிருந்ததுடன், கனிந்துவுக்கு தங்க விருதையும் தேசிய சிறந்த தர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் 2013இல் பெற்றுக் கொடுத்திருந்தது. தனது செயற்றிட்டத்தை 2013 Infotel கண்காட்சியிலும் இவர் காட்சிப்படுத்தியிருந்தார்.  

அன்று முதல் iHelmet என்பது விருத்தியடைந்து 2015இல் தற்போதைய நிலையை எய்தியிருந்தது. வாகன சாரதிகளால் தற்போது இது பயன்படுத்தப்படுகிறது. iHelmet மென்பொருள் மூலமாக ஸ்மார்ட்ஃபோன் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது வாகனம் செலுத்துபவருக்கு அதிவேகம் தொடர்பான அறிவுறுத்தல்கள் முதல் வாயுத் தரம் மற்றும் அவசர சமிக்ஞைகள் போன்ற பல விடயங்கள் பற்றிய அறிவித்தல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவானாகிய Verizon இன், 'சக்தி வாய்ந்த விடைகள் விருது' என்பது பல மில்லியன் டொலர் புத்தாக்க வாய்ப்பாகவும், சவாலாகவும் அமைந்துள்ளது. போக்குவரத்து, அவசர பதிலளிப்புகள் மற்றும் பல விடயங்களின் இணையம் போன்ற வெவ்வேறு பிரிவுகளில் அர்த்தமுள்ள தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2015 போட்டிக்கு இந்த பிரிவுகள் Verizon இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில் காணப்படும் புத்தாக்குநர்களின் மூலமாக இந்த சக்திவாய்ந்த பதில்கள் விருதுக்காக போட்டி நிலவியது. இந்த சர்வதேச போட்டியில் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X