Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 28 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனம், கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, உராய்வு நீக்கி தொழில்நுட்பம் தொடர்பான உயர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை அண்மையில் நடாத்தியது. வயது வந்த இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள தொழில்சார் பயிற்சியை வழங்குவதற்காக, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், மின்சார மற்றும் மின் இலத்திரனியல் தொழில்நுட்பம் உட்பட, தன்னியங்கி, நிர்மாணம், உணவு பதனிடும் தொழில்நுட்பம், இயந்திரவியல் பொறியியல், என்பவற்றுடன் தகவல் தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளை வழங்குகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம், எதிர்கால மோட்டார் வண்டி பொறியியலாளர்களை உருவாக்குவதற்கு தன்னியக்கி உராய்வு நீக்கி தொழில்நுட்பம் மீதான அதியுயர் மற்றும் நவீன அறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், தொழில்நுட்ப அறிவுடைய பிரபல்யமான நிபுணர்களினால் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டம் விசேடமாக இலங்கை,ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உராய்வு நீக்கி தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழிற்துறை மாற்றம் தொடர்பாகப் பிரத்தியேக ரீதியானதும் தெளிவானதுமான அறிவை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலங்கை,ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சித்திட்டம் செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப முகாமையாளரான, ஹிலரி பெர்னாண்டோவினால் திறமையாக கட்டமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், உராய்வு நீக்கியின் அடிப்படைகள், உராய்வு நீக்கியின் உருவாக்கல், தன்னியக்க எஞ்சின் எண்ணெய் தொழில்நுட்பம். கியர் ஒயில் தொழில்நுட்பம் மற்றும் கீறீஸ் வகைகளை அறிமுகப்படுத்தல் போன்ற பரப்புகள் பூர்த்திசெய்யப்பட்டது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் ஜேர்மன் நாட்டு ஆலோசகரான கிறிஸ்டோப் ஹான்ஸ் வுதாவ் “இது செவ்ரோனுக்கும் இலங்கை,ஜேர்மன் பயிற்சி நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட கால உறவொன்றுக்கான ஆரம்ப நிகழ்வு, நாங்கள் எங்கள் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .