Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாக்கமான அலங்கார வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2008 இல் ஜப்பானின் நிபொன் பெயின்ட் இனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்த Asia Young Designer Aw ards (AYDA) நிகழ்வு, முதல் தடவையாக இலங்கையில் நிபொன் பெயின்ட் லங்கா (பிரைவட்) லிமிட்டெட்டினால் 2016 ஒக்டோபர் மாதத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
“Be Bold, Be Free, Be You” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டி, இலங்கையின் கட்டடக்கலை மற்றும் உள்ளக அலங்காரம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. தமது புத்தாக்கமான சிந்தனைத்திறனைக் கொண்டு உருவாக்கிய செயற்பாடுகள் ஊடாக நடுவர்களை கவர முடியும் என்பதுடன், துறையில் தமக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இலங்கையில் AYDA நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பில், நிபொன் பெயின்ட் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜா ஹேவாபோவல கருத்துத் தெரிவிக்கையில், “மேற்பூச்சுத்துறையில் புத்தாக்கமான வெளிப்பாடுகளை வெளிக்கொணர்வது தொடர்பில் நிபொன் பெயின்ட் எப்போதும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. AYDA வில் பங்குபற்றும் மாணவர்களுக்கு, தமது திறமைகளை வெளிக்காண்பித்து, விருதுகளைத் தட்டிச்செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் துறைகளில் காணப்படும் நவீன அம்சங்கள் பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இவர்களுக்கு முறையான பயிற்சிகள் சர்வதேச துறைசார் நிபுணர்களால் வழங்கப்படும்” என்றார்.
இலங்கை கட்டடக்கலை கல்வியகத்துடன் நிபொன் பெயின்ட் லங்கா கைகோர்த்து, இப் போட்டிகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். வௌ;வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதையும் மேற்கொள்கிறது. இலங்கை கட்டடக்கலை கல்வியகத்தின் உப தலைவர் டி.எச்.விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “நிபொன் பெயின்ட் லங்காவினால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.
இதுபோன்ற பெருமைக்குரிய நிகழ்வுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் கட்டடக்கலைத்துறை, அலங்காரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மட்டத்தில் போட்டியிட்டு தமது திறமைகளை வெளிக்காட்ட இது பெரும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
19 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
4 hours ago