2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லங்காசோய் iCook

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சோயா உற்பத்தித்துறையில் முன்னோடியான லங்காசோய், தமது புதிய உற்பத்தியாக iCook இனை அண்மையில் சந்தையில்; அறிமுகம் செய்துள்ளது. இந்நாட்டு சோயா உற்பத்தி பாரம்பரியத்தில் புரட்சிமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய, ஸ்டர் ஃப்ரை முறையில் தயாரித்துக் கொள்ளக்கூடிய தேசத்தின் முதல் சோயா உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

'தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்துவதன் ஊடாக வாடிக்கையாளருக்கு மேம்படுத்தப்பட்டதும், அதிக சௌகரியத்தையும் வழங்குவதே எமது தேவையாகும். லங்காசோய் அறிமுகம் செய்துள்ள iCook இத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலனாகும். ஸ்டர் ஃப்ரை முறையில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இலங்கையின் முதலாவது சோயா உற்பத்தியாக இதுவுள்ளதுடன், இளம் வயதிலுள்ள பிள்ளைகள் இதனை மிக இலகுவில் தயாரித்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது' என கன்வீனியன்ஸ் ஃபூட் (லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலங்க த சொய்சா தெரிவித்தார்.

சிக்கன், சீஃபுட், வெஜி ஆகிய மூன்று சுவைகளில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லங்காசோய் iCook இன் 90கிராம் பக்கற்றின் விலை 65 ரூபாய் மட்டுமேயாகும். சாதாரண சோயா உற்பத்திகளை போல வெந்நீரில் ஊறவைத்து அல்லது பிழிந்து கொள்வதற்கான அவசியமின்மையால், பிறந்தநாள் விழாக்கள், விசேட கொண்டாட்டங்கள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு இந்த உற்பத்தி மிகவும் ஏற்றதாக உள்ளது. பரபரப்பான வாழ்க்கைமுறைக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ள எம் நாட்டு மக்களுக்கு வீட்டிலேNயு தயாரித்த போஷாக்கு நிறைந்த உணவினை தமது குடும்ப உறுப்பினருக்கும், விருந்தினர்களுக்கும் பரிமாறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

'குடும்பத்தின் சமையலறை பொறுப்பு தாயிடமே இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரையும் சமையல் வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய போசாக்கு மிக்க உற்பத்தியொன்றினை வாடிக்கையாளருக்கு அறிமுகப்படுத்துவதே சந்தை முன்னோடியான எமது முயற்சியாக அமைந்திருந்தது' என கன்வீனியன்ஸ் ஃபூட்(லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் தரப் பாதுகாப்பு முகாமையாளர் மாலா ரணதுங்க குறிப்பிட்டார்.

iCook உற்பத்தியை அறிமுகம் செய்துள்ள லங்காசோய் ISO 9001:2008, ISO 22000:2005, GMP, HACCP மற்றும் SLS 898 தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளது. லங்காசோய் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்நாட்டு சோயா உற்பத்தி துறையில் முன்னோடியாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. சோயா உற்பத்திகள் தொடர்பாக மிகக்குறைந்தளவில் கவனம் செலுத்தப்பட்ட காலத்தில் இத்துறையில் பிரவேசித்த உற்பத்தியான லங்காசோய், இலங்கை சோயா உற்பத்தி துறையில் தரச்சான்றிதழை பெற்ற முதல் நிறுவனமாக திகழ்கிறது.

லங்காசோய் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பல விருதுகளை வென்றுள்ளதுடன், அவற்றுள் 2013 ஆம் ஆண்டில் SLIM வர்த்தகநாம மேன்மை விருதுகள் விழாவில் வருடத்தின் சிறந்த வர்த்தகநாமம் எனும் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

கொஸ்ட்ரோல் அற்ற புரோட்டீன் அதிகமுள்ள தினசரி உணவுவேளையில் இலகுவாக சேர்த்துகொள்ளக்கூடிய போசணை ஆகார உற்பத்தியான Icook, சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் (லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் தயாரிப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X