2025 ஜூலை 30, புதன்கிழமை

இலங்கையில் இரு தொழிற்பயிற்சி நிலையங்கள்

Gavitha   / 2016 நவம்பர் 27 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மத்தியிலும், கம்பஹாவிலும் இரு தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுவதற்கு கொரியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM) முன்வந்துள்ளது. இதன் மூலமாக இலங்கை உயர்ந்த, மத்தியளவு வருமானமீட்டும் நாடாக உயர்வதற்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், துறையில் காணப்படும் அறிவுசார் இடைவெளியை நிவர்த்தி செய்வதுடன், ஊழியர் விநியோகத்தை மேற்கொள்ளவும் பங்களிப்பை வழங்கவுள்ளது.  

இ ந்தத் திட்டத்தினூடாகக் குறித்த நிலையங்களை நிறுவுவதற்குப் பங்களிப்புகள் வழங்கப்படுவதுடன், இலங்கையில் காணப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்பயிற்சி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது.  

இந்தச் செயற்றிட்டம் பூர்த்தியடையும் நிலையில், இலங்கையின் வேலையில்லாதோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்பதுடன், இந்த நிலையங்களிலிருந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் திருப்திகரத்தன்மையையும் உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.  

1978ஆம் ஆண்டு முதல் கொரியாவின் (EXIM) வங்கி இலங்கையுடன் 340 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதிப்பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .