Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது எதிர்காலத்தை கட்டியெழுப்ப தனக்கென காணியொன்றினை சொந்தமாக்கிக் கொள்வதே அனைவரதும் கனவாக உள்ளது. தீவாவின் மூன்று பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு இக்கனவு நனவாகியுள்ளது.
இலங்கையின் மிக வெற்றிகரமான நுகர்வுப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றான ஹேமாஸ் ஒளிமயமான நாளையை உருவாக்கும் வகையில் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்திவரும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது.
தீவா நாட்காட்டியின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய நிகழ்வாக 'தீவா காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்டம் அமைந்துள்ளதுடன், சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த வழிமுறையாக இது அமைந்துள்ளது.
ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முதற்தர டிடர்ஜன்ட் சலவைத்தூள் வர்த்தகநாமமான தீவா மூலம் கடந்த மே 1ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரை முன்னெடுத்த வருடாந்த தீவா 'காணி அதிர்ஷ்டம்' மாபெரும் நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தில் வெற்றி பெற்ற மூன்று வெற்றியாளர்களுக்கு அண்மையில் காணி உறுதிகள் வழங்கப்பட்டிருந்தன.
2015 'தீவா காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்ட காலப்பகுதியில் தீவா அதன் பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு வாராந்தம் பெறுமதி வாய்ந்த பரிசில்களை வெல்லும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. இதன் போது 13 வெற்றியாளர்களுக்கு தங்க நாணயங்களும், 90 தினசரி வெற்றியாளர்களுக்;கு தலா ரூ.10,000 வீதமும் வழங்கப்பட்டிருந்தன.
பெறுமதி வாய்ந்த தீவாவினை வழங்குவதில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான வரலாற்றினைக் கொண்ட வர்த்தகநாமம் எனும் ரீதியில,; தீவா அதன் விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளையும் வழங்கி வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொழும்பை அண்மித்து காணிகளை பரிசளிப்பதன் ஊடாக ஒரு டஜனுக்கும் அதிகமான வெற்றியாளர்கள் தம் வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளமையை தீவா உணர்ந்துள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது வருடமாக தீவா அதன் 'காணி அதிர்ஷ்டம்' பிரசாரத்தை முன்னெடுத்ததுடன், 500 இற்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் பணப் பரிசில்கள் மற்றும் ஏனைய பெறுமதி வாய்ந்த வெகுமதிகளை வென்றுள்ளனர். இந்த வருட ஊக்குவிப்பு திட்டமும் தீவா பாவனையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
கொழும்பை அண்மித்து பெறுமதி வாய்ந்த காணிகளை பரிசளிக்கும் வகையில் கடந்த 2011ஆம் ஆண்டில்; முன்னெடுக்கப்பட்ட 'வட்;டத்துக்கு காணி' எனும் முதலாவது தீவா வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தை ஒத்ததாக கடந்த 2012ஆம் ஆண்டில் 'நுவனக்காரியன்ட இடமக்' எனும் திட்டத்தில் பங்கேற்குமாறு தீவா வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் கடந்த 2013ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட தீவாவின் 'புதையலுடன் காணி' எனும் மூன்றாவது மாபெரும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் ஊடாக நான்கு காணித்துண்டுகள் வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டன. கடந்தாண்டு மட்டும் ஐந்து வாடிக்கையாளர்கள் காணி உரிமையாளர்கள் எனும் பெருமையை பெற்றிருந்ததுடன், இதுவரை 16 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் காணித்துண்டுகளை வென்றெடுத்துள்ளனர்.
'எமது விசுவாசமிக்க நுகர்வோர் தளத்தை நாம் முழுமனதுடன் மதிப்பதுடன், ஒவ்வொரு தீவா ஊக்குவிப்பு திட்டத்தின் ஊடாகவும் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய வெகுமதி ஒன்றினை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது. வீடொன்றை நிர்மாணிக்க காணியொன்றை சொந்தமாக்கிக் கொள்வதே பெரும்பாலான இலங்கையர்களின் வாழ்நாள் கனவாக உள்ளதுடன், எமது தீவா 'காணி அதிர்ஷ்டம்' திட்டம் ஊடாக இந்த கனவினை நனவாக்குவதற்கான தளத்தை வழங்கி வருகிறோம்' என ஹேமாஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஃபியோனா முனசிங்க தெரிவித்தார்.
மூன்றாவது காணியை வென்ற மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவியான ஷர்னிகா ரட்னா குமார் தமது மகிழ்ச்சியை எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார், 'சில நிறுவனங்கள் பரிசில்களை வெறும் பரிசில்களாக மட்டுமே வழங்குகிறது. ஆனால் தீவா மாத்திரமே அதன் காணி வெகுமதியின் ஊடாக ஒரு புதிய வாழ்க்கையை பரிசளிக்கிறது. இந்த பரிசானது எனக்கும், எனது குடும்பத்திற்கும் எல்லையற்ற சந்தோஷத்தை அளித்துள்ளதுடன், எமது எதிர்காலத்தை பாதுகாத்த தீவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொழும்பில் காணியொன்றை சொந்தமாக்கிக் கொள்ளும் எமது கனவு தற்போது நனவாகியுள்ளது' என்றார்.
இந்த வருடத்தின் 'காணி அதிர்ஷ்டம்' திட்டத்தின் முதல் வெற்றியாளர் கேகாலை துலிகா பிரியதர்ஷினி கருத்து தெரிவிக்கையில், 'இந்த போட்டியில் நான் கடந்த பல ஆண்டுகளாக பங்குபற்றி வந்ததுடன், நான் வெற்றியீட்டுவேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த காணியானது நிச்சயமாக எமது வாழ்க்கையை மாற்றியமைப்பதுடன், எமது குழந்தைகளும் வளம்மிக்க எதிர்காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்த ஊக்குவிப்பு திட்டத்தை வருடாந்தம் முன்னெடுத்துவரும் ஹேமாஸ் மற்றும் தீவாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தேசத்திற்கான அவர்களின் அளப்பரிய சேவையை தலைவணங்குகிறேன்' என்றார்.
இந்த வருடத்தின் இரண்டாவது காணி வெற்றியாளரான புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த கருணாதிலக பெர்னாண்டோ தமது வெற்றி குறித்து தெரிவிக்கையில், 'நாம் வசிக்கும் பிரதேசம் கொழும்பிலிருந்து வெகுதூரத்தில் இருப்பதால் எண்ணற்ற துன்பங்களுக்கு முகம் கொடுத்தோம். இத்தனையாண்டு காலம் அரசு வழங்கிய காணியிலேயே குடியிருந்தோம். தீவாவிடமிருந்து காணியை வென்றமையானது எமது கனவினை நனவாக்கியுள்ளது' என்றார்.
தீவா சலவைத்தூளில் பல தெரிவுகள் உள்ளன. தீவா ரெகியூலர் எலுமிச்சை நறுமணத்திலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 'தீவா ஃபிளவர்ஸ்' ரோஜா மற்றும் எலுமிச்சை மற்றும் மல்லிகை மற்றும் எலுமிச்சை போன்ற தெரிவுகளிலும் கிடைக்கின்றன. மேலும் எலுமிச்சை, லெமன் மற்றும் மல்லிகை நறுமணங்களில் தீவாவின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டிடர்ஜன்ட் சோப் வகைகள் உள்ளன. அனைத்து சுப்பர் மார்க்கட்டுகளிலும் கிடைக்கும் தீவா வைட் பவுடர் டிடர்ஜன்ட் சலவைத்தூளானது மிகச்சிறந்த சலவை இயந்திர சலவைத்தூள் தெரிவாக அமைந்துள்ளது. தீவாவின் லிக்விட் ப்ளு உற்பத்தி அனைத்து சலவைகளுக்கும் ஏற்ற சிறந்த தீர்வாக உள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago