2025 மே 21, புதன்கிழமை

எயார்டெலுக்கு கௌரவிப்பு

Editorial   / 2018 மே 14 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதில் எயார்டெல் லங்கா மற்றும் அதன் மூன்று முகாமையாளர்கள் காண்பித்து வரும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளைக் கௌரவிக்கும் வகையில், முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த முகாமையாளர்கள் விருதுகள் 2017 நிகழ்வில், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இந்நிகழ்வு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு லீடர்ஷிப் அக்கடமி மற்றும் பீப்பிள் பிஸ்னஸ் இந்தியா ஆகியன கைகோர்த்திருந்தன.   

இந்த நிகழ்வின்போது, இலங்கையிலுள்ள நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த முகாமையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

பெறுபேறுகள், நிறைவேற்றுதல், ஊழியர்கள், அணி, நிறுவனங்கள் மற்றும் தலைமைத்துவ நேர்மை போன்ற விடயங்களின் மீது இந்த ஆய்வு முறை கவனம் செலுத்தியிருந்தது. சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனம் எனும் கௌரவிப்பை எயார்டெல் லங்கா தனதாக்கியிருந்தது.

மேலும் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வலய செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி காமன் ரன்வலகே, டேடா, VAS மற்றும் ரோமிங் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி சன்ன முனசிங்க, சேர்ப்பு மற்றும் ஒப்பந்தங்களுக்கான தலைமை அதிகாரி உதக கப்பாகொட ஆகியோருக்கு தனிப்பட்ட வெற்றியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டிருந்தன.  

இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பார்தி எயார்டெல் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான ஜினேஷ் ஹெச் கருத்துத் தெரிவிக்கையில், “ஊழியர்களின் விருத்தியில் தொடர்ச்சியாக நிறுவனம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குக் கிடைத்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளது. மேலும் பல சிறந்த முகாமையாளர்களைத் தயார்ப்படுத்துவதனூடாக எமது நிறுவனத்தின் வினைத்திறன் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .