2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சந்திப்பு

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் டி பெரேரா, சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர், சுற்றுலா சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் யு.பி.எஸ். பத்திரன ஆகியோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவை அண்மையில் சந்தித்திருந்தனர்.

இதன் போது, நாட்டின் கிராமிய மட்டத்தில் காணப்படும் சுற்றுலாத் துறை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான சுற்றுலாத் துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து எந்தவகையில் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பில், கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாகத் தூதுக்குழுவின் தலைமை அதிகாரி பிராங் ஹெஸ், அரசியல், வியாபாரம், தொடர்பாடல் பிரிவின் தலைமை அதிகாரி தோர்ஸ்டன் பார்க்பிரெட், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஹர்ஷனி ஹலன்கொட ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .