2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஒடெல் 'கோடைகாலம் 2016' தெரிவுகள் அறிமுகம்

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடைக் காலத்தின் வருகையை ஒடெல் தனக்கே உரிய சிறப்பான நவநாகரிக பாணியில் வரவேற்றுள்ளது. ஒடெல்லின் 2016 கோடைகால தெரிவுகள் வெப்ப மண்டல பிரதேசங்களுக்கு ஒத்துப் போகக் கூடிய பல்வேறு வர்ணங்களைக் கொண்டதாக அமைந்துள்ளன.

Rainfores அல்லது மழைக்காடு, ஜங்கிள் லக்ஸ் என்று இந்தத் தெரிவுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
அலக்ஸாண்டிரா பிளேஸில் உள்ள பிரதான காட்சியகத்தில் இடம்பெற்ற பிரத்தியேகமான ஆடை அணிவகுப்பு கண்காட்சியில் இந்தக் கோடை கால தெரிவுகள் அண்மையில் கோலாகலமாக அறிமுகம் செய்யப்பட்டன. கோடை காலத்துக்குரிய பல்வேறு வகையான ஆடைத் தெரிவுகள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வெப்ப மண்டலத்துக்குரிய மரங்கள் மர இலைகள் மற்றும் மலர்கள் என பிரத்தியேகமான காட்சிகளை உள்ளடக்கியதாக இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மிகவும் விருப்புக்குரிய களஞ்சியசாலை அறிமுகம் செய்துள்ள இந்த ஆடைகள், கோடை காலத்தில் மகிழ்ச்சியை ஊட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பச்சை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, நீலம், வெள்ளை மற்றும் நிழல் நிறங்கள் என பல்வேறு வர்ணங்களில் நவீன பாணியில் நவீன வடிவமைப்புக்களுடன் கூடியதாக பல தெரிவுகளை இந்தக் கோடைகால விஷேட தெரிவுகள் கொண்டுள்ளன. ஒடெல்லின் கோடைக் கால தெரிவுகள் பிரத்தியேகமானவையாகவும் சிறப்பான முறையில் பெயரிடப்பட்டவையாகவும் அமைந்துள்ளன.

இந்த ஆடைகளின் வடிவமைப்புக்காக விஸ்கோஸ், கிரீப், சிபொன், லேஸ் என கோடை காலத்துக்கு பொருத்தமான துணிகளாலும், இன்னும் மெல்லிய ரக துணிகளாலும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X