2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கண்டி பெரஹரவை கண்டு மகிழும் பிரத்தியேக வாய்ப்பு

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைப்பின் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலருக்கு அண்மையில் எதிர்பாராத ஒரு வாய்ப்பு கிட்டியது. கண்டி பெரஹரவை பிரத்தியேகமாக கண்டு களிப்பதற்கான திடீர் அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆயுள் காப்புறுதி துறையில் தலைமை தாங்கும் நிறுவனம் கண்டி எசல பெரஹரவை சிற்றுண்டிகள் மற்றும் இரவு விருந்து என்பனவற்றுடன் கண்டு களிக்கும் பிரத்தியேக வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.

அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் செலிங்கோ பிரீமியம் கழக உறுப்பினர்கள் ஆவர். கண்கவர் கண்டி பெரஹரவை மத்திய மலை நாட்டின் தலைநகரில் இலக்கம் 65, கிங்ஸ் வீதி ,கண்டி என்ற முகவரியில் அமைந்துள்ள கம்பனியின் கிளையில் அமைக்கப்பட்டிருந்த விஷேட பிரமுகர் மேடையில் இருந்து கண்டு மகிழும் வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டது.

காலி, எம்பிலிப்பிட்டிய, மீகஹகிவுல, கொழும்பு, அநுராதபுரம் என நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பெற்றனர். ஹமாயா இல்ஸ் கண்டியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்பனியின் விருந்தோம்பலையும் இவர்கள் அனுபவித்தனர்.

பெரஹரா பின்னணியுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்கள் அதை கண்டு மகிழும் காட்சி அடங்கிய பிரேம் செய்யப்பட்ட புகைப்படங்கள் நினைவுப் பரிசாகவும் வழங்கப்பட்டன.

இவர்களுள் பலர் கண்டி பெரஹரவை கண்டு மகிழ்ந்தது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செலிங்கோ லைஃப் பிரீமியம் கழகம் மூன்று நிலை உறுப்பினர்களைக் கொண்டது. தமது ஆயுள் காப்புறுதியில் மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளவர்களும் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மாதாந்த சந்தாவாக செலுத்துகின்றவர்களும் பிளேட்டினம் உறுப்பினர்களாவர். காப்புறுதி கொள்கையில் மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்து மாதாந்தம் 50000 த்துக்கும் 100000 த்துக்கும் இடையிலான தொகையை சந்தாவாக செலுத்துகின்றவர்கள் தங்க பிரிவிலும், ஆயுள் காப்புறுதியில் மூன்றாண்டு காலத்தை பூர்த்தி செய்யாத ஆனால் 50000 த்துக்கும் அதிகமான தொகையை மாதாந்த சந்தாவாக செலுத்துகின்றவர்கள் வெள்ளிப் பிரிவிலும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

செலிங்கோ லைஃப் அதன் கண்டி கிளையை தற்போதுள்ள கிங்ஸ் வீதி புதிய முகவரிக்கு கடந்த ஏப்ரலில் இடம் மாற்றியது. இந்த மூன்று மாடி கட்டிடம் 11250 சதர அடி பரப்பளவு கொண்டது. அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர் பாவனைக்கான இடம் போக 80 பேர் பணிபுரிய கூடிய பல்வகை செயற்பாடு கொண்ட ஒரு அறையும் இங்கு உள்ளது. போதிய வாகனத் தரிப்பிட வசதியும் உண்டு. கண்டி பெரஹரவை வசதியாக கண்டு மகிழக் கூடிய மாடம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X