2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களனி கேபள்ஸ் பிஎல்சிக்கு மீண்டும் தேசிய தர விருதுகள்

Gavitha   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கேபள்ஸ் பிஎல்சி, இரண்டாவது தடவையாக தேசிய தர விருதை தனதாக்கியுள்ளது. கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  

தேசிய தர விருதுகளை 2006இல் முதல் தடவையாக களனி கேபள்ஸ் பிஎல்சி வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பாரியளவு உற்பத்தி நிறுவனமான இயங்குகின்றமை, இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணயங்களை ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பேணுகின்றமைக்காக 2017ஆம் ஆண்டில் இந்த விருது களனி கேபள்ஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்டிருந்தது.  

இந்தப் பெருமைக்குரிய விருதை இரு தடவைகள் வெற்றியீட்டிய இலங்கையின் ஒரே வயர்கள் உற்பத்தி நிறுவனமாக களனி கேபள்ஸ் பிஎல்சி திகழ்கிறது.  

இந்த விருதைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில், களனி கேபள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், “களனி கேபள்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான இயக்கத்தின் பின்னணியில் கடுமையான தரங்களை பேணுகின்றமை அமைந்துள்ளது. களனி கேபள்ஸ் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களினால் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்கள் உற்பத்தியாளர்களாக நாட்டில் இனங்காணப்பட்டுள்ளன” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X