Freelancer / 2024 நவம்பர் 25 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பனிச்சங்கேணிக்கும் கல்குடாவிற்கும் இடையில் அமைந்துள்ள காயங்கேணி கடற்பரப்பு சரணாலயத்தினை பாதுகாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. அதன் பிரகாரம், இலங்கை உயிரியற் பல்வகைமை (BSL) என அழைக்கப்படும் இலங்கை வர்த்தக மற்றும் உயிரியற் பல்வகைமை தளத்தின் 'எங்கள் பவளப்பாறைகளுக்கு வாழ்வு' என்ற முயற்சியில் இணைந்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், புளூ ரிசோர்சஸ் டிரஸ்டுடன் (BRT) தொழில்நுட்ப பங்குடைமையுடன் இலங்கை உயிரியற் பல்வகைமை (BSL) நடத்தும் ஐந்தாண்டுத் திட்டம், பவளச் சுற்றுச்சூழலின் மீளெழுச்சிஇ அதன் புதுப்பித்தல்; ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள், சமூக-பொருளாதார நல்வாழ்வு மற்றும் உள்நாட்டு சமூகங்களின் மேம்பாட்டிற்கு பங்களிக்கின்றன.
953 ஹெக்டேர் பரப்பளவில், காயங்கேணி சரணாலயம் 2019 இல் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கூட்டொழுங்கு முறையின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது, இச்சரணாலயமானது அதன் நீண்ட கால உயிர்வாழ்வை பாதிக்கும் வகையில் மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கையான குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. BSLஇன் கூற்றுக்கிணங்க, ஏற்றுமதி சார்ந்த மீன்வளம், குரூப்பர்கள், ஸ்னாப்பர்கள் மற்றும் கிளிமீன்கள் போன்ற இனங்கள் மீது கவனம் செலுத்துவது உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது, ஆனால் நீடிக்க முடியாத மீன்பிடி முறைகள், குறிப்பாக அடிமட்ட வலைகள் காரணமாக மீன்களின் எண்ணிக்கை மற்றும் பலவீனமான பவளப்பாறைகள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. கடல் பாதுகாப்பு பகுதிக்கு வெளியே வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கிறது, அதே நேரத்தில் வலைகளில் ஆமைகள் தற்செயலாகப் பிடிக்கப்படுவது மற்றும் வீட்டு நாய்களால் வேட்டையாடப்படுவது உயிரியற் பல்வகைமை தொடர்பான கவலைகளை எழுப்புகிறது.
கொமர்ஷல் வங்கி மற்றும் பிற பெருநிறுவனங்களின் ஆதரவுடன், காயங்கேணி பவளப்பாறை திட்டமானது சமூகம் சார்ந்த இணைப்புகளைத் திட்டமிடுதல் மற்றும் உருவாக்குதல், களம் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உருவாக்கங்கள் மற்றும் பங்குடைமைகளை அடையாளம் கண்டு நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கும்.
29 minute ago
42 minute ago
51 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
51 minute ago
58 minute ago