Freelancer / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கிளிநொச்சியில் 100 விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சியை வழங்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் கொமர்ஷல் வங்கியானது பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
வங்கியின் 'விவசாய நவீனமயமாக்கல் கிராமம்' திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தின் பசுமை இல்லத்தில் முழு நாள் பயிற்சிப்பட்டறையொன்று நடைபெற்றதுடன், வெளிகளப்பகுதிகளில் செயல்விளக்கங்களும் முன்னெடுகப்பட்டன. இந்நிகழ்வுகள் விவசாயிகள், இளைஞர்கள், விவசாய மாணவர்கள் மற்றும் பயிற்றுனர்களை ஒன்றிணைத்து, ஒழுங்கற்ற வானிலை முறைகள், பூச்சி தாக்குதல்கள் மற்றும் குறைந்த பயிர் விளைச்சல் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் நடைமுறை, மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான நிலையான முறைகளை ஆராய்வதாக அமைந்திருந்தன.
இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் உரம் வெட்டும் கருவிகள், வரட்சியைத் தாங்கும் பயிர் வகைகள், திறமையான நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் கருவிகள் உள்ளிட்ட காலநிலை தொடர்பான நேர்த்தியான புத்தாக்கங்களில் நேரடியாக ஈடுபட்டனர். இந்த பயிற்சிப் பட்டறையானது விவசாயத்தை நவீன, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் இலாபகரமான துறையாக மாற்றுவதற்கான மனநிலை மற்றும் வழிமுறைகள் இரண்டையும் கொண்ட புதிய தலைமுறை விவசாய தொழில் முயற்சியாளர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இளைஞர்களை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனத்தை செலுத்தியது.
இந்தப் பயிற்சிப்பட்டறையானது பல்கலைக்கழகத்தின் குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன் இது கிளிநொச்சியில் உள்ள அதன் தானியங்கி பசுமை இல்லங்கள், விவசாய அலகுகள் மற்றும் விவசாயிகளால் பராமரிக்கப்படும் செயல் விளக்க வயல்களைப் பயன்படுத்தி அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கியது. கொமர்ஷல் வங்கியானது இந்த முயற்சிக்கு நிதி உதவி அளித்ததுடன் மற்றும் அதன் விவசாய கடன் வாடிக்கையாளர்கள் இதில் பங்குபற்றுவதற்கான வசதியை வழங்கியிருந்ததுடன், வங்கியிடமிருந்து வடிவமைக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளின் உதவியுடன் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்தது.
இந்த சமீபத்திய முயற்சியானது விவசாய நவீனமயமாக்கலில் வங்கியின் வளர்ந்து வரும் தடத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்ததுடன் மற்றும் நிலைபெறுதகு தன்மைக்கான வளர்ச்சி, கிராமப்புற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் விருத்திக்கான அதன் பரந்த அர்ப்பணிப்பை பிரதிபலித்தது. இத்தகைய முயற்சிகள் மூலம், வங்கி தனது விவசாய வாடிக்கையாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், கடன் இடரைக் குறைத்து, இலங்கையின் விவசாய சமூகங்கள் முழுவதும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026