2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொமர்ஷல் வங்கிக்கு ’சிறந்த வங்கி’ விருது

Freelancer   / 2024 நவம்பர் 15 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கிக்கு இலங்கையின் சிறந்த வங்கி எனும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. அண்மையில் வொஷிங்டன் DC இல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய (IMF) / உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின் போது இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. கொமர்ஷல் வங்கியின் தவிசாளர் ஷர்ஹான் முஹ்சீன் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர். Global Finance சஞ்சிகையால் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Global Finance இனால் வருடாந்தம் வெளியிடப்படும் 'உலகின் சிறந்த வங்கிகள் 2024' பட்டியலில் இலங்கையின் சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கியானது 22வது ஆண்டாக இம்முறையும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த சஞ்சிகைக்கிணங்க, சிறந்த வங்கி விருதுகள் பரந்த அளவிலான சேவைகள், நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களை வழங்கும் மேலும் வேகமாக மாறிவரும் வட்டி வீதத்தின் மத்தியில்  தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை திறமையான முறையில் நிர்வகிக்கும் நிதி நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன.

Global Finance ஸ்தாபகர் மற்றும் ஆசிரியர் பீட பணிப்பாளர் ஜோசப் டி. ஜியாரபுடோவிடமிருந்து விருதை முஹ்சீன் மற்றும் மனதுங்க பெறுவதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .