Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 ஜூன் 14 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாவது அலையைத் தொடர்ந்து அமலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொமர்ஷல் வங்கி தனது நடமாடும் பண வைப்பு மற்றும் மீளப்பெறும் இயந்திரங்களை (Cash Recycler Machines - CRMs) உள்ளடக்கிய தனது நடமாடும் வங்கிச் சேவையை (Bank-on-Wheels) மீளச் செயற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
நடமாடும் வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு சென்று, அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வழக்கமான வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட Bank-on-Wheels நடமாடும் சேவை, தற்போது கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பல நகரங்களிலும் பயணிக்கின்றன. பண வைப்புகளை ஏற்று, பணத்தாள்களை செயன்முறைக்கு உள்ளாக்கி, பண மீளப்பெறலுக்காக அவற்றைப் பயன்படுத்தும் வசதியை, இந்த நடமாடும் அலகுகளில் காணப்படும் பண வைப்பு மற்றும் மீளப்பெறும் இயந்திரங்கள் கொண்டுள்ளன. இதன் மூலமாக இவை பயணிக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பணத்தை வைப்பிலிடவும் மீளப்பெறவும் வசதியேற்படுகிறது. ஏனைய வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் லங்காபே, விஸா, மாஸ்டர்கார்ட், யூனியன்பே வலையமைப்புகள் மூலமாகப் பணத்தை மீளப்பெற முடியும்.
இந்த நடமாடும் அலகுகள் ஒரு நாளில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்வதோடு, வெகு விரைவில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இவ்வாறான மேலும் அதிக நடமாடும் அலகுகள் பயணித்து, மிகப்பெரும் மக்கள் தொகைக்குச் சேவைகளை வழங்குமென வங்கி தெரிவித்தது. இந்த நடமாடும் அலகுகள் பயணிக்கும் இடங்கள் தொடர்பாக விவரங்கள், வங்கியின் இணையத்தளம், அதன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஆகியவற்றில் முதல் நாளே பகிரப்படுகின்றன. இதன்மூலமாக, அவை பயணிக்கும் இடங்கள் தொடர்பான விழிப்புணர்வு முன்னரே ஏற்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
53 minute ago
59 minute ago