Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியானது மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு முழு வரிசைக்கும் கவர்ச்சிகரமான லீசிங் தெரிவுகளை வழங்குவதற்காக, மைக்ரோ கார்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மூலோபாய பங்குடைமை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த பங்குடைமைக்கிணங்க, இரு நிறுவனங்களும் லீசிங் வசதியில் வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளன. இந்த பங்குடைமைக்கான ஒப்பந்தமானது மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
இந்த சலுகைகள் இலங்கையில் மைக்ரோ கார்ஸ் நிறுவனத்தினால் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் MG, Chery, Proton, KGM – SUV கள் மற்றும் Higer சொகுசு பேருந்துகள் உட்பட அனைத்து வர்த்தக நாமங்களுக்கும் பொருந்தும்.
இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், Chery Tiggo4Pro SUV விலையில் ரூ.50,000 விலைக்கழிவு, Proton Saga கார்களுக்கு முதல் ஆண்டு முழு காப்புறுதித் தொகை மற்றும் இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கி.மீ. சேவை பொதி இலவசமாக வழங்கப்படுவதுடன் Rexton Sports பிக்-அப்களை கொள்வனவு செய்யும் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு இலவச பதிவு ஆகியவற்றை வழங்க மைக்ரோ கார்ஸ் உறுதியளித்துள்ளது.
MG வாகன வரிசைகளை எடுத்துக்கொண்டால் MG ZS MCE யை கொள்வனவு செய்யும் முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் சிறப்பு அறிமுக விலையையும், MG ZS Hybrid+, MG HS PHEV, MG5 Sedan, MG S5 – EV மற்றும் MG4 – EV வாகனங்களை பெற விரும்புபவர்களுக்கு சிறப்பு விலைகளையும் வழங்கவுள்ளது.
மேலும் கொமர்ஷல் வங்கியானது இந்த கூட்டு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், கவர்ச்சிகரமான மற்றும் நியாயமான விலையில் லீசிங் திட்டங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட கட்டணத் திட்டங்களை வழங்கவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago