Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வகையில் இயங்கும் புறக்கோட்டை மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கொழும்பு துறைமுக நகரம் (CHEC Port City Colombo) நேற்று முன்தினம் (05) நன்கொடையாக வழங்கியுள்ளது.
பொலிஸ் படையினருக்கான மற்றொரு பாரிய அளவிலான பாதுகாப்பு கருவிகளின் வழங்கலைத் தொடர்ந்து, நிறுவனம் அடுத்த வாரம் சுகாதார மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோருக்காக மற்றுமொரு நன்கொடையையும் வழங்கவுள்ளது.
இந்த நன்கொடையின் பெறுமதி ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமாகும். முப்படைகள், முன்னின்று உழைத்து வருகின்ற பணியாளர்களுக்கும் இத்தகைய நன்கொடைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொழும்பு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான தேசபந்து தென்னக்கோனின் தலைமையின் கீழ், நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக்கொண்டதுடன், CHEC Port City Colombo இன் சார்பில் அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, முகக்கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு கருவிகள் பொது மக்களின் பயன்பாட்டுக்காகக் கிடைப்பதில் பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன், இந்த பொருட்ள்களுக்கானத் தேவை இலங்கையில் அதிகரித்துள்ளது.
கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தினசரி புதிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மெனிங் சந்தை வழங்கி வருகின்ற சேவையை இனங்கண்டு, இந்த சேவைகளை வழங்கி, மக்கள் முறையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த முயற்சியை கொழும்பு துறைமுக நகரம் மேற்கொண்டது.
நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொழும்பு துறைமுக நகரம் அனைத்து இலங்கையர்களையும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும், வீட்டிலேயே இருக்கவும், நல்ல சுகாதாரப் பழக்கங்களை பேணவும், நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago