2025 ஜூலை 28, திங்கட்கிழமை

க்ரிஸ்ப்ரோ குழுமத்தின் சிசு திரிய சமூக நலன் செய‌ற்றிட்டம்

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க்ரிஸ்ப்ரோ நிறுவனம், க்ரிஸ்ப்ரோ ஊழியர் நலன்புரிச் செயற்பாடுகளின் மூலம், தொடர்ந்தும் 5 ஆவது வருடமாக சிசு திரிய சமூக நலன் திட்டத்தை அண்மையில் மேற்கொண்டது.  

க்ரிஸ்ப்ரோ குழும நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக நலன் செயற்றிட்டம் மற்றும் ஊழியர் நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து, க்ரிஸ்ப்ரோ குழுமத்தின் தலைவர் மொஹமட் இம்தியாஸ் அவர்களது கொள்கைத் திட்டமான சிசு திரிய செயற்றிட்டத்தின் மூலம், க்ரிஸ்ப்ரோ நிறுவனத்தின் சகல ஊழியர்களது குழந்தைகளுக்கு பாடசாலை அப்பியாசப் புத்தகங்களை வழங்கும் செயற்றிட்டம் 5ஆவது வருடமாகவும் இடம்பெற்றது.  

இச்செயற்றிட்டத்தின் கீழ், சுமார் 663 மாணவர்கள் 2017 கல்வியாண்டுக்குத் தேவையான சகல அப்பியாசப் புத்தகங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சிசு திரிய செயற்றிட்டமானது க்ரிஸ்ப்ரோ குழுமத்தின் மனிதவள முகாமைப் பிரிவின் முழுமையான கண்காணிப்பின் கீழ், இடம்பெறக்கூடிய சமூக நலன் திட்டமாகும். இதனூடாக தம்முடன் இணைந்து பணிபுwரியும் ஊழியர்களின் செயற்றிறனை மேலும் அதிகரிக்கத்தக்கதாகவும் அவர்களது உள்ளத்தை வெள்ளத்தக்க சிறந்த செயற்றிட்டமாகவும் இது இருந்து வருகின்றமை முக்கிய அம்சமாகும்.  

கலைத்துவத்துடன் இச்செயற்றிட்டமானது இடம்பெற்றமை அனைவரினதம் உள்ளத்தை கவர்ந்த விடயமாக அமைந்திருந்தது. அனைத்து மாணவர்களதும் கலை ஆற்றலை மேடையேற்றிய இந்நிகழ்வில் பெற்றோர்களாகிய ஊழியர்கள் தமது ஒன்றுகூடலை தமது பிள்ளைகளது ஆற்றல்களை வெளிப்படுத்தி அதனோடு அவர்கள் உளமகிழத்தக்க ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கியிருந்தமையானது, நிறுவனத்தின் ஒற்றுமையையும், அவர்களின் ஒருங்கிணைப்பினையும் செவ்வனே எடுத்துக்காட்டிய சந்தர்ப்பமாகும்.  

க்ரிஸ்ப்ரோ மனித வள முகாமைத்துவ அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் வழங்குவதுடன் நின்றுவிடாது அதற்கொத்ததாக சித்திரப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் மரக்கன்றுகளை வழங்கும் செயற்றிட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஊழியர்களுக்கான கவிதைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X