2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சகல பணியகத் தீர்வுகளையும் காட்சிப்படுத்தும் OFFICE I 2017

Gavitha   / 2017 மார்ச் 07 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல பணியகத் தீர்வுகள் தொடர்பில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் ஒரேயொரு பிரத்தியேகக் கண்காட்சி நிகழ்வான Office 2017, எதிர்வரும் செப்டெம்பர் 29, 30 மற்றும் ஒக்டோபர் 1 ஆகிய திகதிகளில், கொழும்பிலுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மையத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.  

புத்தாக்கங்களின் மையமாக மாறவுள்ள Office 2017 நிகழ்வானது, திறன்மிக்க மற்றும் “மிடுக்கான” பணியகங்களை ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட துறைகளைக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை, அசைவற்ற ஆதன இருப்பு, அலுவலக முகாமைத்துவம், தளபாடம், அச்சிடல் தீர்வுகள், அலுவலக வெளிச்ச ஏற்பாடுகள், தேக்கக தீர்வுகள், தகவல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள், பயிற்சித் தீர்வுகள், அலுவலக காகிதாதிகள், விளம்பர அடையாளப் பலகைகள், பாதுகாப்பு ஏற்பாட்டு முறைமைகள், அலுவலகத் தன்னியக்க சாதனங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் மிகச் சிறந்த அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. 3 தினங்களாக இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில், இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து அனேகமான முக்கியமான தயாரிப்பாளர்கள் மற்றும் வழங்குனர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து, சகல பணியக தீர்வுகளையும் வழங்கவுள்ளது.  

தமது பணியகங்களில் கொள்வனவு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நிர்வாக தரத்திலுள்ள அதிகாரிகளுடன் இடைத்தொடர்பாடல்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான தனித்துவமான ஒரு வாய்ப்பினை இந்நிகழ்வு வழங்குகின்றது. புதிதாக அறிமுகமாகியுள்ள உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை நேரடியாகக் காண்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வாக இது மாறியுள்ளது. புத்தாக்கம், படைப்பாக்கத்திறன், தொழில்நுட்பம் என அனைத்து அம்சங்களும் இந்நிகழ்வில் அடங்கியுள்ளதுடன், நிறுவனம் ஒன்றின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் வியாபாரரீதியிலான வளர்ச்சிக்கு அவை அனைத்தும் பங்களிப்பாற்றுகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X