2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சம்பத் பசுமைசார் கண்டுபிடிப்பாளர் விருதுகள்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஆம் ஆண்டுக்கான சம்பத் பசுமைசார் கண்டுபிடிப்பாளராக வெற்றிபெற்றுள்ள, இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரீ. நிரோஷன் மாபெரும் வெற்றிக்கிண்ணத்தையும், ரூபாய் 200,000 பணப் பரிசையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.   

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் SLIIT ஆகியவற்றின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று, ரூபாய் 150,000 மற்றும் ரூபாய் 100,000 பணப்பரிசுகளைத் தமதாக்கியுள்ளன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களின் பல்கலைக்கழகங்களும் நிகழ்வில் இனங்காணல் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளன.  

சம்பத் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு தீங்கின்றிய கண்டுபிடிப்புக்களுக்கான தேசிய போட்டியில், 17 அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்து 78 அணிகள் பங்குபற்றி இருந்தன. முதற்கட்ட மதிப்பீட்டு ஆய்வின் மூலமாக 25 அணிகள் இறுதிக்கட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டியின் பரிமாணங்கள் சார்பில், உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை அபிவிருத்தி செய்வதற்கான முழுமையான பயிற்சியை வங்கி ஏற்பாடு செய்திருந்தது.   

வளர்ந்து வருகின்ற உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்கள் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் பேணும் வழிமுறைகளுடன் தமது திறமைகளை வெளிக்காண்பிப்பதற்கு உதவுகின்ற ஒரு மகத்தான தளமேடையாக இந்த வருடாந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நிலைபேற்றியலூடான, சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற தீர்வுகளை, அபிவிருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள இத்தகைய இளம் திறமைசாலிகளை வளர்த்து, அவர்களுக்கான இனங்காணல் அங்கிகாரத்தைச் சம்பத் வங்கி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .