Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண போட்டிகளின் உத்தியோகபூர்வ சரக்கியல் பங்காளரான DHL நிறுவனம், சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்காக அதன் அர்ப்பணிப்பை விஸ்தரிக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் HSBC உலக ரக்பி செவன்ஸ் தொடருக்கான அதன் பங்காண்மை தொடர்பில் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்தப் போட்டியின் காட்சி தொடரில் பங்கேற்ற 20 குழுக்களுக்கான அனைத்து சரக்கு மற்றும் தளபாடங்கள் கையாளல் மற்றும் சர்வதேச விமான டிக்கட் வழங்கல் மற்றும் ஆய்வகங்களுக்கான எதிர்ப்பு ஊக்கமருந்து மாதிரிகள் உள்ளிட்ட ஏனைய தேவைகளை பூர்த்தி செய்த DHL, இந்த போட்டியின் வெற்றிகரமான முதல் வாரத்தின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
செவன்ஸ் உலக தொடருக்கான சர்வதேச மட்ட பங்காளரும், உத்தியோகப்பூர்வ சரக்கியல் பங்காளருமான DHL நிறுவனமானது, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகளில் நடைபெற்றிருந்த முன்னைய போட்டிகளைப் போல 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டுபாய் நகரிலும், 2016ஆம் ஆண்டு மே மாதம் லண்டன் நகரிலும் இடம்பெறவுள்ள வருடாந்த தொடர்களின் பத்து சுற்றுகளுக்குமான சரக்கியல் மற்றும் தளபாடங்கள் விநியோகங்களுக்கு அனுசரணையை வழங்கவுள்ளது.
மேலும் DHL நிறுவனம் 2015-16 ஆண்டுகளுக்கான பருவகால போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள ஒரு சில குழுக்களுக்கு சரக்கியல் ஒதுக்கீடுகள் உள்ளடங்கலாக, பல்வேறு அடிமட்ட முயற்சிகளின் ஊடாக புதிய பிரதேசங்கள் மற்றும் புதிய பார்வையாளர்கள் மத்தியில் உலக ரக்பி போட்டியின் அபிவிருத்திக்கு உதவி வருகிறது.
DHL Express நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கென் எலன் கருத்து தெரிவிக்கையில், 'HSBC செவன்ஸ் உலக தொடருடனான எமது கைகோர்ப்பானது DHL இன் குழு செயற்பாடு, பேரார்வம் மற்றும் வெற்றிக்கான விருப்பு போன்ற முக்கிய பெறுமதிகளை பகிர்ந்து கொள்வதற்கான எமது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் ரக்பி உலகக் கிண்ண போட்டிகளுக்கு அப்பால் உலகம் முழுவதும் உள்ள புதிய ரசிகர்களுக்கு வருடாந்த அடிப்படையில் சர்வதேச போட்டிகளுக்கான எமது ஆதரவினை விஸ்தரிப்பதையிட்டும், எதிர்கால நட்சத்திரங்களுக்கு உதவிகளை வழங்குவதையிட்டும் நாம் மிகவும் மகிழ்;ச்சியடைகிறோம்' என்றார்.
உலக ரக்பி தலைவர் பெர்னாட் லப்பாசெட் கருத்து தெரிவிக்கையில், 'றக்பி செவன்ஸ் தொடரானது ஒலிம்பிக் போட்டிகளைப் போல வலிமை பெற்று வருகிறது. ஆடவர் மற்றும் மகளிருக்கான தொடரானது அவர்களின் அதிக ஆற்றல், போட்டித்தன்மை மற்றும் ஒளிபரப்பு நட்பு செயற்பாடுகள், சர்வதேச தளங்கள் மற்றும் விழாக்கோல சூழல் உள்ளடங்கலாக சர்வதேச மட்ட செவன்ஸ் போட்டிக்கான வெற்றிக் கதையின் இதயமாக விளங்குகிறது. 'எதிர்வரும் 2016 ரியோ நகரில் அனைவரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளதைப் போல உலகம் முழுவதும் இந்த விளையாட்டினை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக தொடர்ந்து DHL உடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.
சர்வதேச ரக்பி செவன்ஸ் தொடரானது உலகம் முழுவதும் நடைபெறவுள்ள பத்து நட்சத்திர போட்டித்தொடர்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 15 தேசிய ஏழு குழுக்களுக்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுவதுடன், தொடர் முடிவில் ஒட்டுமொத்த போட்டிகளிலும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் சம்பியன் பட்டம் வழங்கப்படவுள்ளது.
மேலும் 2015-16 பருவகால போட்டிகளில் கேப் டவுன், சிட்னி, வான்கூவர், சிங்கப்பூர் மற்றும் பரிஸ் போன்ற 5 இடங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண போட்டி மற்றும் சர்வதேச ரக்பி செவன்ஸ் தொடர் போன்றவற்றுடன் DHL இன் பங்காண்மைக்கு மேலதிகமாக, ஐரிஸ் ரக்பி கால்பந்தாட்ட யூனியன், இங்கிலிஷ் க்ளப் Harlquins FC மற்றும் தென்னாபிரிக்காவின் DHL Stormers உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு குழு போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சரக்கியல் பங்காளராக உள்ளதுடன், கனடா மற்றும் அவுஸ்திரேலியா முதல் கஜகஸ்தான், லாவோஸ் முதல் பிஜி வரையான பிரதேசங்களிலுள்ள நிபுணத்துவ மற்றும் அடிமட்ட போட்டிகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago