2025 மே 21, புதன்கிழமை

சிறந்த நிறைவேற்று அதிகாரியாக ஜினேஷ் ஹெஜ் தெரிவு

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2018ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த தொழில் வழங்குனர் வர்த்தக விருது வழங்கும் விழாவில் ஆண்டின் தலைசிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரியாக, எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிர்வாகப் பணிப்பாளருமான ஜினேஷ் ஹெஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வெகுசிறப்பாக செயற்படும் பெருநிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை கௌரவிக்கும் முகமாக வழங்கப்படும் இவ்விருதுக்கு, சுயாதீன நடுவர் குழாத்தினால் இம்முறை ஜினேஷ் ஹெஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தலைமைத்துவத்தின் நிலையான முன்னேற்றத்தை அடைய அவர் காட்டிய விடாமுயற்சி மற்றும் நிறுவனம் வினைத்திறனுடன் செயற்பட அவர் செய்த பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர் இவ்விருதுக்கு தகுதிபெற்றுள்ளார்.

இவ்விருதுக்கு தகுதிபெற நடைமுறையில் பின்பற்றப்படும் விதிகளுக்கு அமைய, பிரதம நிறைவேற்று அதிகாரி ஜினேஷ் ஹெஜ் அவரது சிறப்பான மூலோபாய திட்டமிடல் மற்றும் அத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி பெற்ற சிறந்த பெறுபேறுகள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன. இதற்கு மேலதிகமாக இலங்கையரின் அபிமானம் பெற்ற தொழில் வழங்குனராக எயார்டெல் லங்கா நிறுவனத்தை முன்னிருத்தும் முயற்சியில் எதிர்கால தலைவர்களை உருவாக்கி அவர்கள் வளர அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்பன அவரின் சிறப்பம்சங்களாகும்.

ஜினேஷ் ஹெஜ் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர், பல்வேறுப்பட்ட நிர்வாக முன்னெடுப்புகளை மேற்கொண்டார். மேலும் சாத்தியமான வணிக வாய்ப்புகளை கண்டுபிடிக்கவும் மற்றும் வணிகத்திற்கு ஒத்திசைவாக சிந்திக்கவும் ஊழியர்களை உந்தித்தள்ளும் ஆற்றல்மிக்க தலைவராக விளங்கிய அவர் எயார்டெல் லங்கா நிறுவனம் சிறந்த பெறுபேறுகளுடன் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X